பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்ருக வளர்ப்பான். கொழு கொழு என்று வளர்ந்ததும் நல்ல விலைக்கு விற்றுவிடுவான். விற்றுவந்த பணத்தை எடுத்துக்கொண்டு அம்மாவிடம் செல்வான். அம்மா, நீ தந்த முட்டைக்கு இதோ பணம்’ என்று கூறிச் சரி யாகக் கணக்குப் பார்த்துக் கொடுத்துவிடு வான். இப்படி ஏழு வயதிலே அவன் வான் கோழி வியாபாரத்தைத் தொடங்கிவிட்டான். பகலெல்லாம் பள்ளியில் படிப்பான். காலை யிலும் மாலையிலும் வான்கோழிகளை வளர்ப் பதிலும் விற்பதிலும் நேரத்தைப் போக்கு வான். அவன் ஒரு கணக்குப் புத்தகம் வைத் திருந்தான். அதன் அட்டை மிகவும் கனமாக இருக்கும். அது என்ன, பள்ளிக்கூடக் கணக் குப் புத்தகமா? இல்லை; வான் கோழி சம்பந்த மான வரவு செலவுப் புத்தகம்தான்! அந்தப் புத்தகத்தை அடிக்கடி புரட்டிப் பார்ப்பான். நாளுக்கு நாள் இலாபம் பெருகி வருவதைக் கண்டு உள்ளுர மகிழ்ச்சியடைவான். அவன் வீட்டு அடுக்களையில் ஓர்உடைந்த தேநீர்க் கோப்பை இருக்கும். அதில்தான் பணத்தைப் போட்டுவைப்பான். சிலர் அவ னிடம் கடன் கேட்பார்கள். நல்ல வட்டிக்குக் கடன் கொடுப்பான். சின்ன வயதிலே வியாபாரம் செய்யவேண் டும், கை நிறையச் சம்பாதிக்க வேண்டும் 36