பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்வது? அதற்காக, விஷம் என்று துண்டுக் காகிதத்தில் எழுதி ஒவ்வொரு புட்டி யின் மீதும் அதை ஒட்டிவைப்பான்! இப்படி அவனுடைய சோதனைச் சாலையில் 200க்கு மேற்பட்ட புட்டிகள் இருந்தன! புதிது புதிதாகப் பல விஞ்ஞான உண்மை களைக் கண்டுபிடிக்க வேண்டும், பெரிய விஞ் ஞானியாக வேண்டும் என்ற ஆசை அந்த வயதிலே அவனுக்கு இருந்தது. வானத்திலே பறவை பறக்கிறதே, அதேபோல் ஏன் மனித ல்ை பறக்க முடியாது?’ என்று அவன் அடிக் கடி தன்னைத் தானே கேட்டுக் கொள்வான். ஒரு நாள் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே இரசாயனப் பொருள் களில் சிலவற்றைக் கலந்தான்; கன்ருக அரைத்துத் துாள் ஆக்கினன். அந்தத் துளை, அவர்கள் வீட்டு வேலைக்காரப் பையனை மைக்கேல் ஒட்ஸ் என்பவனிடம் கொடுத்து, மைக்கேல், இதோ இந்தத் துளை நீ உன் வாய்க்குள் போட்டு விழுங்கவேண்டும். சிறிது நேரத்தில் ஓர் அதிசயம் கடக்கும். நீ இருந்த இடத்தை விட்டு மெல்ல மெல்ல மேலே எழும்பு வாய். அப்புறம், சிறிது நேரத்தில், விர்’ ரென்று வானத்திலே பறக்க ஆரம்பித்து விடு வாய்...உ.ம்...வாயைத் திற" என்ருன். மைக்கேலுக்குப் பயமாயிருந்தது. பயப் படாதே முதல் முதலாக வானத்திலே பறந்த வன் யார் என்று கேட்டால், மைக்கேல் ஒட்ஸ் 41