பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டில் அப்போதுதான் முதன் முதலாக ரயில் பாதை போடப்பட்டு ரயில் வண்டி ஒடத்தொடங்கியது. "ரயில் ஒடு வதைத்தான் அதிசயம் என்று சாமியார் சொல்லியிருக்க வேண்டும்" என்ருர்கள் சிலர். அதே ஆண்டில்தான் தந்தி வசதியும் வந்தது. இதுதான் பெரிய அதிசயம். இதைத்தான் சாமியார் சொல்லியிருக்க வேண் டும்” என்ருர்கள் வேறு சிலர். அதே ஆண்டில்தான் அந்தக் கிராமத் தில் ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தப் பையன் பிறந்த ஆண்டிலே அவனுடைய பெற்ருேருக்குச் சொந்தமாக ஒரு வீடு கிடைத் தது. அதல்ை, அந்தப் பையன் பிறந்தது தான் அதிசயம் என்று அவனுடைய அம்மா கினைத்து கினைத்து மகிழ்ச்சி அடைந்தாள். இதைப் பெருமையாக எல்லோரிடமும் அடிக் கடி கூறுவாள். அந்தப் பையன் ஆரம்பத்திலே திண் இனப் பள்ளிக்கூடத்திலே படித்தான். பிறகு பல புலவர்களிடம் தமிழ் கற்றன். வாலிபன னதும் மகா வித்துவான் மீனுட்சி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் பாடம் கேட்க ஆரம்பித் தான். மகா வித்துவானிடம் சென்றபோது, "உன் பெயர் என்ன?" என்று கேட்டார் அவர் 48