பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்ருல் அதனுடைய அப்பா அம்மாவுக்கு எப்படியிருக்கும்? - ஆணுலும் என்ன? அந்தக் குழங்தை பிறந்தவுடனேயே இறந்து விட்டதா? இல்லை. 75 ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தது. சரி, அதைப் பெற்றவர்களுக்கோ அல்லது மற்ற வர்களுக்கோ ஏதாவது தீங்கு நேரிட்டதா? அதுவும் இல்லை; அந்தக் குழந்தையால் உலகத்துக்கே பெரிய கன்மை ஏற்பட்டது. 70-ஆண்டுகளுக்கு மு ன் பு மலேரியா கோயினுல் ஆண்டுதோறும் லட்சக் கணக் கான மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள். ஆயி ரக் கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருங் தார்கள்.மிகப் பயங்கரமான இந்த வியாதியை வரவிடாமல் தடுக்கவும், வங்தால் விரைவில் விரட்டி ஒட்டவும் வழி கண்டுபிடித்தது யார் தெரியுமா? மே மாதத்தில் 13-ஆம் தேதியில் பிறந்த அதே குழந்தைதான்! ஆம், அது வெள்ளைக்காரக் குழந்தையாக இருந்தாலும், பிறந்தது நம் இங்தியாவில்தான். வடஇந்தி யாவில் உள்ள அல்மோரா நகரில் 1857-ஆம் ஆண்டு பிறந்தது. ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டதும் நம் தேசத்தில்தான். குழந்தையின் தகப்பனுர் ஆங்கிலேயரின் படையில் தளபதியாக இருந்தார். அவருக்கு மொத்தம் பத்துக் குழந்தைகள். மூத்த குழந்தையின் பெயர் ரொனல்டு ராஸ் என்ப தாகும். - 52