பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொதி நீரை ரப்பர்க் குழாய் மூலம் பாய்ச்சு வார்கள். இதல்ை அந்த வீட்டுக்குள் எப் போதும் வெது வெதுப்பாக இருக்கும். ஓந்தி கண்ணுடி வீட்டுக்குள் மகிழ்ச்சியோடு ஓடி ஆடித் திரியும். ஒருநாள் ராஸ் வெளியிலே போயிருந்தார். அப்போது தோட்டக்காரனுக்கு வேடிக்கை யான ஓர் எண்ணம் தோன்றியது. இந்தப் பச்சை ஒக்திமீது பச்சைத் தண்ணிரை ஊற்றி ஞல் என்ன ஆகும்? அதையுந்தான் பார்க்க லாமே" என்று நினைத்தான். ஒரு வாளி நிறை யக் குளிர்ச்சியான நீரை எடுத்து வந்தான். பச்சோந்தியின் தலையிலும் உடலிலும் மட மடவென்று ஊற்றினன். மறு விநாடி பச் சோந்தி குளிர் தாங்காமல் அதே இடத்தில் இறந்து விட்டது! சின்ன முதலாளியாகிய ராஸ் திரும்பி வங் தார். செத்துக் கிடங்த பச்சோங்தியைக் கண் டார். விவரம் அறிந்ததும் துடிதுடித்துக் கண்ணிர் விட்டார். அப்போது தோட்டக் காரன் மன்னிப்புக் கேட்டான். அகியாயமாக என் தோழனைக் கொன்றுவிட்டாய்; உன்னை மன்னிக்கவே மாட்டேன்” என்று கதறினர். பச்சோங்தியின் உயிருக்காக அ ன் று. கண்ணிர் விட்டவர். பிற்காலத்தில் பல்லா யிரக்கணக்கான உயிர்களை மலேரியாவி லிருந்து காப்பாற்றினர்! 54