பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த மண்ணின் மீது கடுகு எண்ணெயை ஊற்றி இருப்பார்கள். அதுதான் குஸ்தி போடும் இடம். அந்த இடத்தில்தான் கான பயில்வான் குத்துச் சண்டை கற்றுக் கொடுப் பார். அவருடன் தாகூர் சண்டை போடுவார். இருவரும் கட்டிப் புரளுவார்கள்; உருளு வார்கள். உ. ட ம் .ெ ப ல் லா ம் மண் ஒட்டிக் கொள்ளும். குஸ்தி வகுப்பு முடிந்ததும், தாகூர் உடம்பைத் தட்டிவிட்டுக்கொண்டு, வீடு திரும்புவார். ஆலுைம், தலையிலும், முதுகிலும் மண் ஒட்டிக் கொண்டிருக்கும். "இது என்ன விளையாட்டு? உடம்பெல் லாம் ஒரே மண்! இப்படித் தினமும் மண்ணைப் பூசிக்கொண்டு வந்தால், உன் சிகப்பு கிறம் மங்கிவிடாதா' என்று தாகூரின் அம்மா கோபித்துக் கொள்வாள், விடுமுறை கா ட் க ளி ல் அவருடைய அம்மாதான் குளிப்பாட்டி விடுவாள். அப் போது அவள் ஒரு வாசனைத் திரவியத்தை மேலே தேய்ப்பாள். அரைத்த பாதாம் பருப்பு, பால், ஆரஞ்சுப் பழத்தோல் இன்னும் என் னென்ன வெல்லாமோ சேர்த்துத் தயார் செய்ததுதான் அந்த வாசனைத் திரவியம். இது எதற்காகத் தெரியுமா? தாகூரின் கிறம் மங்கிப் போகாமல் இருப்பதற்காகத்தான்! தாகூரிடம் அம்மாவுக்குப் பி ரி ய ம் அதிகம். ஆனாலும், சின்ன வயதிலே காடகம் 56