பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்க்க அவரை அனுமதிக்கவே மாட்டாள். *சிறுபிள்ளைகள் நாடகம் பார்த்தால் கெட்டுப் போய்விடுவார்கள்" என்று அம்மா நினைத் தாள். அம்மா மட்டுமா? அந்தக் காலத்தி லிருந்த பெரியவர்கள் எல்லோருமே அப்படித் தான் கினைத்தார்கள். தாகூருக்குச் சிற்றப்பா ஒருவர் இருந்தார். அவர் நாடகம் எழுதுவார். நாடகங்களைத் தயார் செய்வார். நடிகர்களில் சிறுவர்களும் இருப்பார்கள். 'சிறுவர்கள் நாடகத்தைப் பார்க்கக் கூடாதாம். ஆல்ை, கடிக்கலாமாம்" என்று தாகூர் குறைப்பட்டுக் கொள்வார். தாகூர் வீட்டில் அடிக்கடி நாடகம் கடக் கும். ஒருநாள், அவர்கள் வீட்டில் களன்-தம யந்தி நாடகம் நடைபெற இருந்தது. அந்த நாடகத்தைச் சிறுவர்களும் பார்க்கலாம் என்று பெரியவர்கள் அனுமதி கொடுத்துவிட் டார்கள். சிறுவர் தாகூருக்கு அளவில்லாத மகிழ்ச்சி. - 'நாடகம் ஆரம்பிக்க வெகுநேரம் ஆகும். நீ படுக்கையில் படுத்துத் துரங்கு. நாடகம் ஆரம்பமானதும் உன்னை எழுப்புகிறேன்" என்ருள் அம்மா. தாகூர் முதலில் அம்மாவின் பேச்சை நம்பவில்லை, ஆலுைம்,அம்மா உறுதி யாகச் சொன்னதால், சரி என்று போய்ப் படுத்துவிட்டார். - "மணி அடித்தது. அப்போதுதான் காட கம் ஆரம்பமானது. உடனே, ஒருவர் வந்து 57