பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனல் அந்தச் சிறுவன், அங்கேயே நிற்கவில்லை. வேகமாக அந்த வண்டியை நோக்கி ஓடினன். கையைக் காட்டி அந்த வண்டியை நிறுத்தினன். வண்டி நின்றதும், ஒரே தாவில் அந்த வண்டியில் அவன் ஏறி ன்ை. வண்டி ஒட்டியின் அருகிலே போய் கின்றுகொண்டு, ஐயா, மன்னித்துக் கொள் ளுங்கள். இதற்குமுன் நான் இது மாதிரி வண் டியைப் பார்த்ததே இல்லை. இது என்ன வண்டி எப்படி இது தாகை ஓடுகிறது?” என்று ஆவலாகக் கேட்டான். வண்டி ஒட்டி அந்தச் சிறுவன உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒருமுறை பார்த் தார். அப்போது அவனுக்குப் பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அவன் அவ்வளவு ஆர்வமாகக் கேள்வி கேட்டது வண்டி ஒட் டிக்கு வியப்பாக இருந்தது. உடனே அவர், :இங்கு ஒரு சாலை போடப் போகிருர்கள். அதற்காகத்தான் இதை ஒட்டிச் செல்கிறேன். இதன் பெயர் ரோடு-என்ஜின்’. நீராவியால் இது ஒடுகிறது" என்ருர், சிறுவன் உடனே வண்டியிலிருந்த பல பகுதிகளையும் கூர்ந்து பார்த்தான். எப்படி இது வேலை செய்கிறது? மணிக்கு எத்தனை மைல் போகும்” என்று கே ள் வி மேல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனன். வண்டி ஒட்டியும் பொறுமையாகப் பதில் கூறி 64