பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'முடியுமோ, என்னவோ, எனக்குத் தெரியாதப்பா. யாரும் சிறகு கட்டிக்கொண்டு பறந்ததாகத் தெரியவில்லை." "அப்படியானல், நான் பறந்து காட்டு கிறேன். என்ருவது ஒருநாள் பறந்து காட்டு வேன்.” "அண்ணு கூடவே நானும் பறப்பேன்’ என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினன் அரு கிலே இருந்த தம்பி. சரி, இப்போது பறந்து விடாதீர்கள். கொஞ்சம் வயதாகட்டும்' என்ருள் தாய் சிரித் துக்கொண்டே. - சகம் பிள்ளைகள் கெட்டிக்காரப் பிள்ளை க ள் தா ன் என்று மனத்திற்குள்ளே சொல்லிக் கொண்டாள். பிற்காலத்தில் அவர் களைக் கெட்டிக்காரர்கள் என்று இந்த உலகமே மனம் விட்டுப் பாராட்டத் .ெ த ா ட ங் கி விட்டது. சிறிய வயதிலே வானத்தில் பறக்கவேண் டும் என்று ஆசைப்பட்ட அச்சிறுவன் பெயர் வில்பர் ரைட்; அவன் தம்பி பெயர் ஆர்வில் ரைட்.1903ஆம் ஆண்டில் பறக்கும் இயங்திரத் தைக் கண்டுபிடித்து வானத்திலே பறக்க விட்டவர்கள் அவர்கள்தான். ரைட் சகோ தரர்கள் என்னும் அவர்களது விடாமுயற்சி யால்தான் இன்று விமானம் பறப்பதை நாம் பார்க்கின்ருேம். 70