பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணியலாம் என்றுதான் அந்தப் பெண் கினைத்தாள். திருமணத்தன்று மாப்பிள்ளைப் பையன் புதுச் சரிகை வேட்டி கட்டி, சரிகைத் தொப்பி அணிந்திருந்தான். சின்னப் பல்லக்கிலே அவனை உட்கார வைத்து, பெண்வீட்டை நோக்கி மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு வீட்டிற்குள் இருந்தவர்களெல் லாம் வெளியிலே ஓடிவந்தார்கள். தெருவிலே சென்றவர்களெல்லாம் ஒதுங்கி கின்று வேடிக்கை பார்த்தார்கள். கல்யாணப் பெண்ணுக்கும் இந்த வேடிக் கையைப் பார்க்கவேண்டும் என்று ஆசை. பெரியவர்களுக்குத் தெரியாமல் அவள் பூனை போல் வாசலுக்கு வங்தாள். ஒரமாக கின்று கொண்டு, ஊர்வலத்தை எட்டி எட்டிப் பார்த் தாள். ஆலுைம், சிறிது நேரம்கூட அவளை அங்கு நிற்க விடவில்லை; பிடித்து உள்ளே இழுத்துச் சென்று. மணமேடையில் உட்கார வைத்து விட்டார்கள். திருமணம் ஆனபிறகு, கம்முடன் விளை யாடுவதற்கு ஒரு தோழன் கிடைத்தான்!” என்று அங்தச் சிறுமி கினைத்தாள். அந்தப் பையனும் அப்படித்தான் கினைத்தான். அந்தப் பெண்ணுக்கு, எழுதப் படிக்கத் தெரியாது. படிக்காத பெண்ணுக இருந்தாலும், 73