பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டத்தில் மட்டுமல்ல; வீட்டுக்குள் ளேயும் அவர்கள் இப்படி விளையாடுவார்கள். அப்பொழுது அவர்கள் பலமாகக் கூச்சல் போடுவார்கள், "ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்?' என்று சில சமயங்களில் அம்மா கோபித்துக் கொள்வாள். அம்மா வுக்கு எவ்வளவுதான் கோபம் வந்தாலும், குழந்தைகளை அடிக்கவே மாட்டாள். கோபம் அதிகமாக வந்துவிட்டால், அவள் என்ன செய்வாள், தெரியுமா ? அப்பாவின் அறையிலே கைபிடியுடன் கூடிய ஒரு கறுப்பு நாற்காலி இருக்கும். எந்தக் குழங்தையாவது தவறு செய்தால், அங் தக் குழந்தையை அங்தக் கறுப்பு நாற்காலி யில் அம்மா உட்கார வைத்துவிடுவாள். எங் கும் போகக்கூடாது. இங்கேயே உட்கார்க் திருக்கவேண்டும். கான் போகச் சொன்னுல் தான் போகலாம்" என்று கண்டிப்பாக உத் தரவு போட்டுவிடுவாள். குழந்தைகளை காற். காலியுடன் சேர்த்துக் கயிற்ருல் கட்டிவைக்க மாட்டாள். ஆனலும், கட்டிவைத்தது போல் அவர்கள் ஆடாமல் அசையாமல் நாற்காலி யில் உட்கார்ந்திருப்பார்கள். சிறிது நேரம் சென்றதும். அம்மா நாற் காலியின் அருகிலே வருவாள். என் கண் னல்லவா ? நீ தப்பு செய்யலாமா ? இனி செய்யக்கூடாது. போய் விளையாடு” என் பாள். - - . 80