பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போது, அங்கே கூடியிருந்தவர்கள், *இவன் காப்பாற்றப்பட்டான்.” “இவன் காப்பாற்றப்பட்டான்" என்று சத்தம் போட் டார்கள். பிறகு, எல்லோரும் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். அரவிந்தரையும் அவ்வாறே பிரார்த்தனை செய்யும்படி சொன் ஞர்கள். அரவிந்தருக்கு ஒன் றுமே புரிய வில்லை. ஆலுைம், அவர் சும்மா இருக்க வில்லை; வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தார். அரவிந்தர் அப்போது கிறிஸ்தவ மதத் தில் சேர்ந்துவிட்டதாகவே எல்லோரும் பேசிக் கொண்டார்கள். ஆல்ை, கிறிஸ்தவ மதம் என்ருல் என்ன என்பதுகூட அந்த வயதில் அரவிந்தருக்குத் தெரியாது. ஆல்ை, வளர்ந்து பெரியவரானதும் அவ ருக்குத் தெரியாத மதமே இல்லை. எல்லா மதங் களிலும் உள்ள உண்மைகளை உணர்ந்தார். எல்லா மதங்களையும் மதித்தார். பெரிய யோகியானர். பல புத்தகங்களை எழுதினர். புதுச்சேரியில் ஒர் ஆசிரமம் அமைத்தார். அதுதான் அரவிந்த ஆசிரமம். அந்த ஆசிரமத்தில் சாதி வேற்றுமை கிடையாது; மதவேற்றுமை கிடையாது; இன வேற்றுமை கிடையாது. எல்லா தேசத் தவரும் எல்லா மொழியினரும் அங்கே ஒன்ருக வசித்து வருகிருர்கள்; ஒன்றுகூடிப் பிரார்த்தனை செய்கிருர்கள்! 86