பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உளறுவாயாக இருக்கிறதே என்று அக்கம் பக்கத்திலிருந்தவர்களெல்லாம் அனுதாபப் படுவார்களாம். சின்னஞ்சிறு குழந்தையா யிருந்தபோது ஆல்பர்ட்டைப் பார்த்துப் பலர் அனுதாபப் பட்டார்கள். பள்ளியில் சேர்ந்த பிறகு பல மாணவர்கள் அவனைப் பார்த்து முகம் சுளித் தார்கள். காரணம் ? ஒருநாள் ஒர் ஆசிரியர் துருப்பிடித்த ஆணி ஒன்றை வகுப்புக்குக் கொண்டு வங் தார். மாணவர்களே ! நம் ஏசுநாதரைச் சிலுவையில் அ ைற் ங் து கொன்றவர்கள் யார் ?" என்று கேட்டார். கயூதர்கள்” என்ருர்கள் மாணவர்கள். ஏைசுநாதரைக் கொல்ல உதவிய ஆணி எது தெரியுமா ? இதோ இருக்கிறது” என்று அந்த ஆணியை மேலே துக்கிப் பிடித்துக் காட்டினர் ஆசிரியர். மாணவர்கள் அந்த ஆணியைப் பார்க்க வில்லை. ஆல்பர்ட்டையே மு ைற த் து ப் பார்த்தனர். ஆல்பர்ட்டுக்கு இது அவமான மாக இருந்தது. வேதனையாகவும் இருந்தது. காரணம், அவன் யூதர் குடும்பத்திலே பிறங் தவன். இப்படி அனுதாபத்துக்கும் வெறுப்புக் கும் ஒரு காலத்தில் ஆளாகியிருந்த ஆல் பர்ட் பிற்காலத்தில் உ ல க மே போற்றும் ஒரு பெரிய விஞ்ஞானியானன் ஆல்பர்ட் 93