பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 3 - 35 5. பெருந்தேவனார் அருளியது ஒதவினை அகலும் ஓங்கு புகழ் பெருகும் காதல் பொருள் அனைத்தும் கை கூடும் - சீதப் பனிக் கோட்டு மால்வரை மேல் பாரதப் போர் தீட்டும் தனிக் கோட்டு வாரணத்தின்தாள். 6. அவ்வையார் அருளியவை வாக்கு உண்டாம் ; நல்ல மனம் உண்டாம் ; மாமலராள் நோக்கு உண்டாம் ; மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார்திருமேனித்தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. பாலும்,தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான்தருவேன்-கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா: 7. உமாபதி சிவம் அருளியது வானுலகும் மண்ணுலகும் வாழ,மறை வாழப் பான்மை தரு செய்ய தமிழ் பார்மிசை விளங்க ஞானமத, ஐந்து கர, மூன்று விழி நால்வாய் ஆனைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம். 8. தேசி விநாயகப் பிள்ளையார் ஒருபா ஒருபது கம்பன் அடிப் பொடி சா.கணேசன் அருளியது 1. நன்று புரிராசநாராயணபுரமாம் குன்றார் மருதங்குடியதனில் நின்றருளும் வேத முதல் தேசி விநாயகப் பிள்ளையார் தீது அகற்றிக் காப்பார் தினம். 2. செய்ய மருதங்குடி வாழ் தேசி விநாயகரும் உள்ள நமைக் காத்து அருளும் ஓங்கார-ஐயனையே அல்லும் பகலும் அனவரதமும் துதிப்போம் நல்ல வழிகாட்ட நமக்கு.