பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

"ஐயோ! சத்தியமாக அந்த எண்ணமே எனக்குக் கிடையாது சுவாமி! ரூபாய் செலவழித்துக் கற்றுக் கொண்ட புத்திமதியை அதற்குள் நான் மறந்துவிடுவேனா?" என்ற தனபாலன், மறுகணம் 'தப்பினோம் பிழைத்தோம்' என்று வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான்.

கஞ்சப் பிரபுவான தனபாலன் தம் கையில் மீண்டும் ஒரு நாலாயிரம் ரூபாய்களைக் கொண்டு வந்து கொட்டவுமே, சர்மா ஒரு கணம் "திருதிரு" வென்று விழித்தார், ஒன்றும் புரியாதவராய் எல்லாம் உணர்ந்த பிள்ளையார் கல்லாக உட்கார்ந்திருந்தார்.