பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

நோட்டுகள் அவன் கையில் சிக்கின. அதைத்தொடர்ந்து அவன் நினைவும் அதிர்ஷ்டப் பரிசு விளம்பரத்தைச் சுற்ற ஆரம்பித்தது. அவன் மனம் ஒரு முடிவுக்கு வந்து நின்றது.

ஒரு ரூபாயை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு நேராகச் செட்டியார் கடைக்குச் சென்றான். ஒரு ரூபாயைக் கொடுத்து, கைலாசம் காம்படிஷன்ஸ் கம்பெனியின் பரிசு டிக்கெட் ஒன்று வாங்கிக் கொண்டு வீடு வந்துவிட்டான். ஆனால், அன்று இரவு முழுவதும் ராஜாவுக்குத் தூக்கமே வரவில்லை. குற்றமுள்ள அவன் நெஞ்சு உறுத்திக் கொண்டேயிருந்தது. தன் திருட்டு வெளியாகிவிட்டால்...? என்ற ஒரு பயம் அவன் உள்ளத்தைக் கெளவிக்கொண்டது.

மறுநாள் பொழுது புலர்ந்தது. ஆபீசுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த ராஜாவின் தந்தை, பையில் வைத்திருந்த பணத்தில் ஒரு ரூபாய் குறைவதைக் கண்டு இரைந்துகொண்டிருந்தார். ராஜாவின் உடல் பயத்தால் வெடவெடத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவன் தந்தைக்குச் சந்தேகம் முழுவதும் ரவியின் பேரில்தான். ஏனெனில், அவன்தான் இதற்கு முன்பு சில தடவைகளில் தன் தாயாரின் காசுகளைத் திருட்டுத்தனமாக எடுத்து, மிட்டாய், முறுக்கு முதலியவை வாங்கித் தின்றிருக்கிறான். ஆகவே, வழக்கம் போல், ரூபாய் காணாத பழியும் ரவியின் தலையில் விழுந்தது.

அவன் தந்தை பலம் கொண்ட மட்டும், அவனது திருட்டுச் செய்கைக்காக அடித்துக்கொண்டிருந்தார். நிரபராதியான ரவி, "அப்பா! அப்பா! நான் அந்த ரூபாயைக் கண்ணால்கூடப் பார்க்கவில்லை!" என்று எவ்வளவோ கதறியும் அவன் தந்தை நம்பவிலலை. தன் மனைவி தடுப்பதையும் அவர் லட்சியம் செய்யவில்லை.

"இனிமேல் இந்தத் திருட்டுப் புத்தியை விடுவாயா? மருந்துக் கடைக்குப் பணம் கொடுக்க வேண்டுமே!