பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

பாக்கிப் பணத்திற்கு இப்போது எங்கே போவேன்? என்றார் அவர். அவருடைய கைகள்தாம் வலித்தன. பயன் ?

இத்தனையையும் மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ராஜாவுக்கு அதற்கு மேலும் மனம் கேட்கவில்லை. தான் செய்த குற்றத்திற்கு, ஒன்றுமறியாத தன் தம்பி அநுபவிக்கும் தண்டனை அவன் இதயத்தை உலுக்கி விட்டது.

ஒடிச் சென்று, தந்தையிடம் தம் செய்கையைப் பற்றிக் கூறி, குற்றத்தை ஒப்புக்கொண்டான் ராஜா. ஆனால், அவர் அப்போதிருந்த மனநிலையில், பிள்ளையின் நேர்மையைப் பற்றிச் சிந்திக்கத் தோன்றவில்லை. அவரது ஏமாற்றமும் கோபமும் திசை மாறிக் கடுமையாகச் சுழன்றது. வீட்டைவிட்டே ராஜாவைத் துரத்திவிட்டார். அன்று இரவு முழுவதுமே ராஜா வீட்டிற்கு வரவில்லை. தாயாரின் கவலை வரம்பு மீறியதாகிவிட்டது.

பெற்ற மனம் எதையெல்லாமோ எண்ணிப் பதைபதைத்தது. தன் கணவரின் ஆத்திரத்திற்காகவும், அவசர புத்திக்காகவும் அவளது மனம் அளவில்லாத கவலைகொண்டு தவித்தது. ராஜாவின் தந்தை அவனை எங்கெல்லாமோ ஒரு வாரம் வரை தேடி அலைந்துவிட்டு, உடைந்த உள்ளத்துடன் வீடு திரும்பினர்.

புத்திசாலியான பிள்ளை, தன்னைவிட்டுப் போனதிலிருந்தே தாயார் படுத்த படுக்கையாகிவிட்டாள். தாங்க முடியாத புத்திரபாசம் அவள் மனத்தை வாட்டிப் பிழிந்தது. பிரேமாவும் ரவியும் ஆறுதல் இன்றித் தவித்தனர். பிடிவாதமான பிள்ளையின் செய்கை குடும்பத்தையே ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.

மாதம் ஒன்று வாடி உதிர்ந்தது. கால்கள் சென்றவிடமெல்லாம், கஷடத்தையே சுமையாகக்கொண்டு,