பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பரம்பரையில் ஒரு வீரனை உருவாக்கும் வாய்ப்பைத்தான் அவர் நெஞ்சம் சதா தேடி வந்தது.

திடீரென்று, பெருகிக்கொண்டே போன பேரிரைச்சலைக் கேட்டு எழுந்து, கூடத்துப் பக்கம் போனர் புருஷோத்தமன்.

அங்கே—

ஒரே குழந்தைகளின் களேபரம். பெரிதாக ரேடியோவைத் திருப்பி வைத்துவிட்டு, குடும்புத்தின் பால கோஷ்டிகள் அனைவரும் அதைச் சூழ்ந்து உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், சிதம்பரம் அந்தக் கோஷ்டியில் கலக்காமல், ஏதோ சோகமாக ரேடியோவின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தான்.

அதே சமயத்தில் அடுக்களையிலிருந்து ஸ்ரீமதி புருஷோத்தமன், "குழந்தைகளே, ரேடியோவை நிறுத்தி விட்டு எல்லோரும் சாப்பிட வாருங்கள்’’ என்று குரல் கொடுத்தாள்.

மறுநிமிஷம் அத்தனை சிறுவர்களும் அடுக்களையை நோக்கி ஓடினர்கள். சிதம்பரம் மட்டும் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருப்பதைப் புருஷோத்தமன் கவனித்தார். சிதம்பரம், அவரது மூன்றாவது பெண்ணின், நான்காவது பையன். அவனைக் கண்டதும் அவருக்குத் 'திக் 'கென்றது!

அவனது முகமெல்லாம் வீங்கி, கண்ணெல்லாம் சிவந்து நன்றாக அழுது ஒய்ந்தவன் போலிருந்தான். இதைக் கண்ட புருஷோத்தமனின் மனத்திற்கு மிகுந்த துக்கம் ஏற்பட்டது. என்றாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர் குழந்தைகளைக் கூப்பிட்டு, அவர்களுடைய அழுகைக்கோ கோபத்திற்கோ காரணங்களை