பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அந்நிய ஆக்கிரமிப்பை முறியடிக்க, கடும் குளிரிலும், பனியிலும் அல்லல்பட்டு நமக்காக - நம்முடைய தாய் நாட்டிற்காகப் போராடும் ராணுவ வீரர்களின் தியாக வாழ்வு ஒர் இளம் உள்ளத்தை எப்படித் தொட்டு உலுக்கிவிட்டது!

இவன் அல்லவோ வீரன்! தேச பக்தியை உணர்ந்து கொள்ளத் தெரிந்த இவன் அல்லவோ வருங்கால மகா புருஷன்!

போலியாகப் பட்டாசும், மத்தாப்பும் தனக்கென்று வாங்கிக் கொளுத்தி மகிழவேண்டிய வயதில் பயங்கரமான உண்மையான - பீரங்கிகளின் வீரமுழக்கத்துக்கும், எந்த நிமிஷமும் சாவைத் தழுவ வேண்டிய குண்டு வீச்சுகளுக்கும் மத்தியில் உயிரையும் மதியாது போராடும் அந்த வீரர்களை எண்ணி - அவர்களுக்காகவும் - அவர்களுடைய தியாகத்திற்காகவும் வீரத்திற்காகவும் எண்ணிக் கண்ணிர் வடிக்கத் தன் பரம்பரையில் ஒரு வீரன் பிறந்து விட்டான் என்பதை எண்ணிப் பார்க்கையில் புருஷோத்தமனது மனம் பெருமையால் பூரித்தது.

சூழ்ந்திருந்த அமைதியைச் சிதம்பரம்தான் கலைத்தான்.

"ஏன் பாட்டி, அப்படியே நின்னுட்டீங்க? எல்லாத் துணியிலேயும் உங்க கையினலே மஞ்சளும் குங்குமமும் தடவிக் கொடுங்க. இதைப் போட்டுக்கிற ஒவ்வொரு சிப்பாயும் உங்களுடைய ஆசியினாலே நம் எதிரியைப் போரிலே வென்று முரியடிச்சு, நாட்டைக் காப்பாற்றச் சிரஞ்சீவிகளாகப் பணியாற்றட்டும்" என்று கூறிய வண்ணம் துணிகளை எடுத்துப் பாட்டியிடம் கொடுக்கும் போதே அதன் மத்தியிலிருந்து ஒரு பில் விழுந்தது.

அதைப் பிரித்துப் பார்த்த புருஷோத்தமன் அந்த ஆடைகளுக்கான ரூபாய் 350 என்பதைப் புரிந்துகொண்