பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ஆனால் இவற்றுள், ஒன்றையும் அறியாத பாவாடை மேல்துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பயபக்தியுடன் வணக்கம் தெரிவித்து நிமிர்ந்தான்.

"நீர்தான் தணிகாசலத்தின் தந்தையா? மிட்டாய் மொத்தம் எத்தனை ரூபாய் விலை மதிப்பு இருக்கும்?" மந்திரிதான் கேட்டார்.

"ஐந்து ரூபாய்க்குள் இருக்குமிங்க !"

"இந்தாரும்! இந்தக் கவருக்குள் ஐம்பது ரூபாய் இருக்கிறது. இனிமேல் தட்டு வியாபாரம் வேண்டாம். சுகாதார முறைப்படி ஒரு சிறு மிட்டாய்க்கடை வைக்க இந்தப் பணத்தை வைத்துக்கொள்ளும்!" என்று மந்திரி அன்போடு அளித்தார்.

"'நன்றாகப் படித்து நீ முன்னுக்கு வரவேண்டும்" என்று பையனையும் வாழ்த்தி அனுப்பினர். அவருக்குத் தகப்பனும் பிள்ளையும் நன்றி தெரிவித்து, பிறகு வீட்டை அடைந்தனர். பெற்றவள் பிள்ளையை வாரி அணைத்துக் கொண்டாள்.

இப்போது திலகர் பள்ளிக்கெதிரிலிருக்கும் 'சுதந்தர மிட்டாய்க்கடை'யின் முதலாளி யார் தெரியுமா? அதே பாவாடைதான்!