பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

"நண்பர்களே, என் அன்பார்ந்த மாணவர்களே, வருஷத்துக்கு ஒரு முறை அட்மிஷன் சமயத்தில், பிள்ளைகளின் பெற்றோரிடமிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள, நான் நடிக்கிற நாடகந்தான், நண்பர் கார்த்திகேயனையும் உங்களையும் இத்தனை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது. இது——என்னுடைய நடிப்புத் திறன்——எனக்கு ஒரு விதத்தில் பெருமையாகவும் இருக்கிறது. வேண்டுமானால் அதே பாதிரியாரே இதோ, வந்துவிட்டார். அவரைக் கேளுங்கள்" என்று சொல்லி, தம் கைப்பையிலிருந்த நீண்ட வெள்ளை அங்கியையும், அதன்மீது சிவப்புப் பட்டியையும், சிலுவைச் சின்னம் கோத்த ஜப மாலையும் அணிந்துகொண்டு, பொய்த் தாடியையும் பொருத்தியபடி, கையில் பைபிள் புத்தகத்தையும் கல்லூரி முதல்வர் எடுத்துக்கொண்டார். உடனே மாணவர்களிடையே எழுந்த கைதட்டல் ஒலி அந்தத் தோட்டத்தையே .அதிர வைத்துவிட்டது.

கார்த்திகேயன் பிள்ளையும் சேகரும் பிரமித்து நின்றார்கள்.