பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6
மாயக்கண்ணன்

டைரக்டர் சம்பூர்ணம் ஐந்தாவது முறையாகச் சோர்ந்துபோய்த் தமது நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார். தம்முடைய இத்தனை வருட அனுபவத்தில் ஒரு காட்சியைப் படமாக்க அவர் இத்தனை சிரமப்பட்டதே கிடையாது.

ஆம்! குழந்தை நட்சத்திரம் கலா அவரை அத்தனை பாடு படுத்திவிட்டது. பாடுபட்டும் பலன் இல்லையே! காலையிலிருந்து அதனுடன் டைரக்டர் பட்ட பாட்டைப் பார்த்துவிட்டு, சக நடிகர்கள், ஒளி, ஒலிப்பதிவாளர்கள், ஊழியர்கள் அனைவருமே வியந்தனர்.

அவர்களும் சளைக்காமல் டைரக்டருக்குத் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் அளித்து உதவினர்.

ஆனல், அவர்களுடைய உதவியெல்லாம் யாருக்கு வேண்டும்? நடிக்க வேண்டிய குழந்தை நடித்தால் அல்