பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

கையை விட்டார். சாக்கலேட்டும் டாபியும் கைநிறையக் கொடுத்தார்.

குழந்தையும் ஆவலோடு அதைப் பிரித்துப் பிரித்து ஒவ்வொன்றாகத் தின்று தீர்த்து ஜிகினாப் பேப்பர்களை பறக்கவிட்டது.

பிறகு, டைரக்டர் மெதுவாகக் குழந்தையின் முதுகைத் தட்டிக் கொடுத்து, அது செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் நிதானமாக விளக்கினார். குழந்தை எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டது. டைரக்டரின் முகம் மலர்ந்தது. அதன் எதிரொலி எல்லோர் முகத்திலும் பிரதிபலித்தது.

தெருவெல்லாம் ஓடிப் போய்க் கலைந்திருந்த ‘மேக்அப்பைச்' சரிசெய்து, இடையில் ஒரு புல்லாங்குழலையும் செருகிச் சட்டென்று அனுப்பி வைத்தார். மேக்கப் நிபுணர். கூற வேண்டிய வசனத்தையெல்லாம் டைரக்டர் ஒரு முறை சொல்லிக் கொடுத்தார். குழந்தை "பளிச்" சென்று கூறியது. சம்பூர்ணத்தின் மனம் களிப்பில் மூழ்கியது. வாய் விசிலை ஊதியது.

எல்லோரும் 'டேக்' குக்கு 'ரெடி!' கண்ணனும் கையில் கூழாங்கற்களுடன் தயாராய் மரத்தின் பின்னால் நின்றுகொண்டிருந்தான். டைரக்டர் 'ரெடி' என்று குழந்தையைப் பார்த்து குஷிப்படுத்துவதற்காகக் கேட்டார். குழந்தை கன்னம் குழியச் சிரித்துக்கொண்டே. மயில் பீலி அசையத் தலையை ஆட்டியது. அந்த அழகில் டைரக்டர் பூர்த்துப் போனார்.

குழந்தையின் முகக்களையும் வேஷப் பொருத்தமும் சிரிக்கையில் பளிச்சிட்ட முத்துப்பற்களும், அவரைப் பரவசத்தில் ஆழ்த்தின. கண்ணனையே மரத்திற்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் போது பார்ப்பது போலிருந்தது.