பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அங்கே அவர்கள் கண்ட காட்சி....? யாரோ ஒரு கிராமத்து ஸ்திரீயின் கையில் மற்றொரு கண்ணன்....! ஆனால், மேக்-அப் கலைக்கப்பட்ட கண்ணன்——கொண்டையும் மயில் பீலியும் அவிழ்க்கப்பட்ட நிலையில் காட்சியளித்த கண்ணன்.

பத்மாசனி அம்மாளைப் பார்த்ததும், அத்தனை நேரம் அந்தக் கிராமத்து ஸ்திரீயின் பிடியிலிருந்த கண்ணன் கையைச் சட்டென்று உதறிக்கொண்டு, 'பாட்டீ' என்று ஓடிவந்து கட்டிக்கொண்டது.

பார்த்தால் குட்டி நட்சத்திரம் கலா...!

அனைவருடைய கண்களும் ஆச்சரியத்தினால் அகல விரிந்தன. ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. டைரக்டரின் அருகிலிருக்கும் கண்ணனைக் கண்டதும், "குஞ்சம்மா" என்று அழைத்தவண்ணம் அந்தக் கிராமத்து ஸ்திரீ ஓடிச் சென்று, வாரி அணைத்து, வேப்பெண்ணெய் தடவிய உச்சியில் முத்தமாரி பொழிந்தாள்.

அதன் பிறகு, அந்த ஸ்திரீ கூறிய விஷயங்களைக் கேட்ட பிறகுதான் எல்லோருக்குமே எப்படிக் குஞ்சம்மா ‘கலா'வாக மாறினாள்; அல்லது கண்ணனாகவே தக்க சமயத்தில் வந்து தங்களையெல்லாம் ஆட்கொண்டு தங்கள் தொழிலையும் காப்பாற்றினாள் என்பது புரிந்தது.

"ஐயா, இதுதான் என் பெண் குஞ்சம்மா. நேற்று தெருக்கூத்து பார்த்துவிட்டு வந்ததிலிருந்து, அதிலே வருகிற கிருஷ்ணன் மாதிரி தனக்கும் வேஷம் போட வேண்டும் என்று அடம் பிடித்தாள். இவள் எனக்குச் செல்லப்பெண். இவளுடைய அப்பாவும் இப்படித்தான். அவருக்கு நாடகப்பித்து. எங்கே போனாலும் இவளையும் அழைத்துக்கொண்டு செல்லுவார். கிராமத்தில் அவர் இல்லாத பெரிய தெருக்கூத்தே கிடையாது.

"கம்சன் வேஷத்தில் தோன்றி, கதையை எடுத்துச் சுழற்றினால் கிராமமே நடுங்கும். வேஷத்தைக் கலைத்து