பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

என்ன போதனை செய்தான்?" என்று விசாரித்தார். ஆனால், அவர்கள் யாராவது அவருடைய வார்த்தையை மதித்துப் பதில் கூறினால்தானே!

"சரி, உங்களுக்குள் அவ்வளவு ஒற்றுமையா? வாசு வரட்டும். அவனையே கேட்டில் நிறுத்தி வைத்துக் கேட்கிறேன்" என்று தம்மைச் சமாதானப்படுத்திக்கொண்டு விட்டார். ஆனால்—–

மறுநாளே ஊரிலிருந்து திரும்பி வந்துவிட்ட வாசு, தன் அறையில் வந்து அடக்கமாக நிற்பதைக் கண்டதும் பசுபதிக்கே ஒரு கணம் 'திக்' கென்றது.

"என்ன?"--என்கிற பாவனையில், முதலாளி அலட்சியமாக அவன் மீது பார்வையைச் செலுத்தினார்.

வாசு ஜேபியிலிருந்த ஒரு கடிதத்தைப் பணிவுடன் முதலாளியிடம் நீட்டினான். 'வெடுக்' கென்று அதைப் பெற்றுக்கொண்ட அவர், வெறுப்புடனேயே பிரித்துப் படித்தார். அதில்--

"அன்புள்ள முதலாளி அவர்களுக்கு,

நமது மில்லில் இந்த வருஷம் உற்பத்திக் குறைவினால் ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக, வழக்கமாக தாங்கள் அளித்து வரும் பொங்கல் போனசை, வாசு அவர்களின் சொற்படி இவ்வாண்டு விட்டுக் கொடுக்க நாங்கள் சம்மதித்து இருக்கிறோம்" என்று எழுதப்பட்டு, அதன்கீழ் அத்தனை தொழிலாளர்களும் தங்கள் பூரண சம்மதத்தைத் தெரிவித்துக் கையெழுத்திட்டிருந்தனர்.

பசுபதி ஒருகணம் ஒன்றும் புரியாமல் வியப்பால் திகைத்துப் போனார். வாசு விளக்கினான்.

‘முதலாளி, இப்போ நம்ம மில்லுக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமையை---நெருக்கடியை-- எடுத்துக் கூறி