பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 ரசின் சார்பில் நடைபெறும் விழாக்களில் மட்டுமல்லாமல் நாள்தோறும் இந்தப் பிரச்சாரத்தை அனைவரும் செய்திடல் வேண்டும். ஏனெனில், இது நாள்தோறும் நினைவுபடுத்திட வேண்டிய விவகாரம். ஏடுகளில், இதழ் நடத்துவோர் அவர் களாகவே இதுபற்றிய எடுப்பான விளம்பரங்களைச் செய்ய லாம். கட்டணத்திற்காக அன்றி கடமைக்காகச் செய்யப்பட வேண்டிய விளம்பரம் இது என்பதால், வானொலியில் ஒவ் வொரு நாளும் இரண்டு தடவைக்குக் குறையாமல்மிகச் சுருக்க மாக நாலைந்து வரிகளில் விளம்பரம் செய்யலாம். அனைத்துக் கும் குடும்பநலத் திட்டத் துறையை எதிர்பார்க்காமல் ஆர்வ முடையோர் அனைவரும் முன்வந்து செய்திட வேண்டிய சிறந்த செயல் இது என்பதை எடுத்துக் கூறுவது என் கடமையாகும். இந்தத் திட்டத்தின் வெற்றியே நாட்டின் வெற்றியாகும். ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையின் வெற்றியுமாகும். வெற்றிமேல் வெற்றி குவித்திட இந்த வெற்றியே அடிப்படையு மாகும். அதனைத் தெளிந்து செயலாற்ற அனைவரையும் வேண்டுகிறேன்.

  • *

100