பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்போது தெரியுமா? பப்பர் ஆற்றல்மிகு பாரதிக்கும் அவர் தாசர்க்கும் விழா எடுப்போம் விழா எடுக்கும் வேளையிலே...அவர்தம் விழாக் கருத்தைச் செவிமடுப்போம். கண்கள் விற்றுச் சித்திரம் வாங்குவதோ எனக்கேட்ட பாரதிக்குத் தாசன் பெண்கள் கொய்யாப்பழக் கூட்டமென்றுரைத்தான். 66 'தனித்துக் கிடந்திடும் லாயம் - அதில் தள்ளியடைக்கப்படும் குதிரைக்கும் கனைத்திட உத்திரவுண்டு - வீட்டில் காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டுமோ?" எனக் கேட்டான்... "காதல் அடைதல் உயிர் இயற்கை - அது கட்டில் அடங்கும் தன்மையதோ? அடி கோதை தொடங்கடி! என்று சொன்னான் -இன்பம் கொள்ளை! கொள்ளை! கொள்ளை! மாந்தோப்பில்!" என்று மகிழ்ந்தவன் 'காதலுக்கு வழிவைத்து கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்" எப்போது தெரியுமா? இப்போது தானே நாம் எனச் சொன்னான் குடும்பக்கட்டுப்பாடென்று கூறி குசேலரைப் போல் ஆகாதீர் எனப் பிரச்சாரம் புரிகின்றோம் பேரரசின் சார்பில்!... 30