பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பங்களில் பெருகவேண்டியது நல்வாழ்வு எத்தனைத் திட்டங்களைத் தீட்டித் தந்தாலும், எவ்வளவு மருத்துவ மனைகளைத் திறந்தாலும், வைத்திய வசதி வாய்ப்புக் களைத் தந்தாலும் அந்தத் திட்டங்களின் பயன், பங்கீடு போடுவதைப் பொறுத்தே இருக்கிறது. பதினாறு பண்டங்களை 8 பேருக்குப் பங்கிடும்போது ஆளுக்கு 2 பண்டம் கிடைக்கிறது. அதே 16 பண்டங்களை 32 பேருக்குப் பங்கிட்டால் ஆளுக்குப் பாதிப் பகுதிதான் கிடைக் கும். ஒரு பக்கத்தில் திட்டங்களுக்காகக் கோடி கோடியாகச் செலவழித்துக்கொண்டே இருக்க, இன்னொரு புறத்தில் உணவு உற்பத்தியை மிஞ்சுகிற வகையில், தொழில் உற்பத் தியை மிஞ்சுகிற வகையில், மனித வகையில், மனித உற்பத்தியின் வேகம் பெருகிக்கொண்டே இருக்குமானால், திட்டங்களின் பயனை அனைவரும் சரிசமமாகப் பங்கிட்டு அனுபவிக்க முடியாது. பணமாகத் தந்து, பல திட்டங்களை நிறைவேற்ற, உங்களு டைய வள்ளல் தன்மை மூலம் அரசுக்கு உதவி செய்வதைவிட, அரசின் திட்டங்களை அதிகமான பேருக்குப் பகிர்ந்தளிக்க முடியாத அளவிற்கு, அதிகமான பேர், அதற்குப் பங்கிற்கு வருகிற நிலையிலிருந்து மாற்றம் காணும் வகையில் நீங்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும். 'அளவோடு பெறுங்கள்; அப் போதுதான் வளமோடு வாழ முடியும்'. மக்கள்தொகைப் பெருக்கம் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே போனால் நாடு தாங்காது. o நான் முன்பொருமுறை 'இந்தியா என்பது கடலில் மிதக் கிற ஒரு தெப்பமாக இருந்தால், மக்கள் தொகையினைத் தாங்க முடியாமல் இந்நேரம் கடலில் அந்தத் தெப்பம் மூழ்கிப் போயிருக்கும்' என்று குறிப்பிட்டேன். அதுபோல் மக்கள் தொகைப் பெருகிக்கொண்டிருக்கிறது. கேட்டால், 'நான் என்ன செய்ய, ஆண்டவன் அளிக்கிறான்,' என்று பழியை ஆண்டவன் மீது போடுகிறார்கள். ஆண்டவன்