பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 என்று நம்முடைய நண்பர் இராமச்சந்திரன் அவர்கள் தென் ஆர்க் காடு மாவட்டத்திலேதான் நாங்கள் அதிகமான அளவுக்கு அறுவைசிகிச்சை செய்து கொண்டிருக்கிறோம் என் சொன்னார்கள். அங்குதான் அதிகமாக இது தேவைப் பட்டிருக்கிறது என்பது இதிலிருந்து எனக்கு நன்றாகப் புரி கிறது! தஞ்சை மாவட்டத்திலே உள்ளவர்கள் ஏற்கனவே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்த காரணத்தினால் அந்த அளவுக்கு இந்த எண்ணிக்கை வளராமல் இருந்திருக்கக் கூடும்! நான் திருவாரூருக்கு அருகாமையிலுள்ள விளமல் என்ற ஒரு கிராமத்திற்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டேன். அறுவைசிகிச்சைக்கு வருகின்ற வர்களுக்கான வாய்ப்பு வசதிகள் அளிக்கப்பட்டு, அவர்கள் எந்த முறையில் நடத்தப்படுகிறார்கள், எவ்வளவு சௌகரியங் கள் செய்து கொடுக்கப்படுகின்றன என்ற விவரங்களையெல் லாம் மாவட்ட ஆட்சித்தலைவரும் குடும்பநல அதிகாரிகளும் என்னிடத்தில் விளக்கிச் சொன்னார்கள். அங்கிருக்கின்ற ஒரு பஞ்சாயத்து யூனியன் கட்டிடத்தில் அவர்களுக்கு வசதியான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஏற் கனவே அறுவை சிகிச்சை செய்துகொண்டால் உடனடியாக அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். காலையிலே அறுவை சிகிச்சை முடிந்து, மாலையிலே அவர்கள் வீட்டுக்கு அனுப்பப் படுகிற காரணத்தால் மருத்துவர்கள் - அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் சொன்ன அறிவுரைப்படி அவர்கள் நடந்து கொள்ளாமல், அறுவை செய்த இடத்திலே வேறுவித தொந் தரவுகள் ஏற்பட்டு, அதன் காரணமாக அவர்களைப் பார்க்கின் வர்கள், இந்த முறையை மேற்கொண்டால் நமக்கும் இந்தத் தொல்லைவரும் என்ற அச்சத்திற்கு ஆட்படுகின்ற சூழ்நிலை இருந்தது. அந்த அச்சம் போக்கப்படுகிற அளவுக்கு, அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை ஆறு நாடகள் அங் கேயே தங்க வைத்து, அவர்களுடைய புண் நன்றாக ஆறிய பிறகு, வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அது மாத்திரமல்ல, அவர்கள் வந்து சேருகிற நாளிலே அவர்களுடைய எடையை எடுத்துக் குறித்து கொள்ளு கி றார்கள். அவர்கள் அந்த இடத் தில் இருந்து விடைபெற்று செல்லுகிற நாளில் அவர்களுடைய எடையை எடுக்கும் பொழுது ஒரு ஐந்து பவுண்டு, ஆறு பவுண்டு அதிகமாகவே இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர் களை என்னிடத்திலே அறிமுகப் படுத்தி அவர்களும் அதை மெத்த சந்தோஷத்தோடு என்னிடத்திலே ஒத்துக் கொண் டார்கள். ஆக இன்றைக்கு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு வெளியே செல்லுகின்றவர்கள், அவர்களே ஒரு பிரச் சாரக் கருவியாக மாறிவிடுகிறார்கள். அவர்களுக்கு ஏற்றவசதி கள் எல்லாம் அந்த இடத்திலே செய்து கொடுக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, இப்படி அறுவை சிகிச்சை செய்து கொண்ட வர்களுடைய பெயர்களை எல்லாம் எழுதி, அவர்களுடைய எண் களையெல்லாம் எழுதி, அதை ஒவ்வொரு நாளும் சீட்டு குலுக்கு வதுபோல குலுக்குகிறார்கள். அப்படிக் குலுக்குவதிலே முதல் . , ம்