பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பரிசு, இரண்டாவது பரிசு, மூன்றாவது பரிசு என்று பல பரிசு களை ஏற்பாடு செய்து அதிலே முதல் பரிசுக்கு 'டிரான்ஸிஸ்டர் ரேடியோவும், இரண்டாவது பரிசுக்குக் கையிலே கட்டிக் கொள்கிற சின்னக் கைக்கடியாரமும், மூன்றாவது பரிசாக நல்ல பெட்டிகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன! - இப்படியெல்லாம் எல்லா முறையிலும் மக்களை கவரத்தக்க வகையிலும், அவர்களுடைய அச்சம் போக்கப்படுகின்ற அள விலும், ஐயப்பாடு நீக்கப்படுகின்ற நிலையிலும், இன்று ந்தக் குடும்ப நலத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் வெகு வேகமாக தீவிரமாக அமுல் படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை பொறுப்பினை நம்முடைய மாண்புமிகு அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் ஏற்றுக்கொண்டு அவர்கள் இதிலே மிகுந்த தீவிர கவனம் செலுத்தி வருகின்றார் கள். அவர்கள் போகின்ற வேகம் இன்னும் கொஞ்ச நாளில் அமைச்சர்களையே கூட அப்படிப்பட்ட இடங்களுக்கு அவரே வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, இந்தச் சிகிச்சையை நீங்கள் செய்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்துகின்ற அளவிற்கு போய்விடுவார் என்று எண்ணுகின்றேன். று வேலைவாய்ப்பும் மக்கள்தொகையும் பொதுவாக இன்றைக்கு பல வெளிநாடுகளில் வேலை இருக்கிறது. அதற்கு ஆட்கள் இல்லை. ஆனால் நம்முடைய நாட்டில் வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். வேலை இல்லை! இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேலை நிறைய இருக் கின்றது,ஆட்கள் தேவையென்று ஒரு காலத்திலே இத்தாலி நாட்டிலிருந்து, ெ ஜ ர்மன் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு அழைப்பு வந்தது. இந்தியாவிலிருந்து ஆட்களை அனுப்புவீர் களா என்று ஜெர்மானிய நாட்டுக்காரர்கள் ந்தியாவுக்கு எழுதி, அப்பொழுது இந்தியாவினுடைய பிரதமராக இருந்த மதிப்பு மிகுந்த பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், அப்படி அனுப்புவது இத்திய நாட்டினுடைய கௌரவத்துக்கு இழுக்கு என்ற முறையில் அனுப்ப இயலாது என்று கூறிவிட்டார்கள். அதற்குப் பிறகு இத்தாலி நாட்டிலே இருந்த மக்கள், ஜெர் மானிய நாட்டுக்கு வேலைக்கு அழைக்கப்பட்டு அவர்கள் அங்கே சென்றார்கள். இன்றைக்கும் நாம் ஜெர்மானிய நாட்டுக்குச் சென்றால் இத்தாலிய நாட்டு மக்களை அதிகமாகக் காணலாம். அங்கே வேலை அதிகமிருக்கிறது. ஆனால் இங்கே நம்முடைய நாட்டில்,நான் முதலிலே குறிப்பிட்டதைப் போல வேலை செய் வதற்கு ஆட்கள் நிறையப் பேர் இருக்கின்றோம். ஆனால் வேலை இல்லாமல் தவிக்கின்றோம். இந்த நிலைமையிலேயே, இதோடு மக்கள் பெருக்கத்தை நாம் கட்டுப்படுத்தாவிட்டால், இன்னும் இந்த மக்கள் பெருக்கம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகுமேயானால், இது எங்கே போய் முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.