பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாயமில்லை: கடமையுணர்வு தேவை தென் ஆர்க்காடு மாவட்டத்தில் போற்றத்தகுந்த ந்த பல நிகழ்ச்சிகளை ஒரே இடத்திலே ஏற்பாடு செய்து,மாவட்ட மெங்கிலும் பரவலாக பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன் பெறத்தக்க காரியங்களுக்கான தொடக்க விழாவினை, இங்கே நடத்தியிருக்கின்ற பாங்கினை நான் எண்ணி, எண்ணி, மி கு மகிழ்ச்சி அடைகின்றேன். 12 உயர்நிலைப்பள்ளிகளுக்கான கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும், ஊராட்சி ஒன்றிய 250 பள்ளிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடை பெற்று இருக்கின்றது. நடை மற்றொரு பெரிய திட்டம்; இந்தியாவிலேயே எந்த மாநிலமும் சாதிக்காததிட்டமாகக் குடும்பக்கட்டுப்பாடு திட்டத் தில் 40,000-க்கு மேற்பட்டவர்களுக்கு 1971-72-ஆம் ஆண்டில் இந்த மாவட்டத்திலே, அறுவை சிகிச்சை பெற்று அத்தனை பேரும் நல்ல பயன் பெற்றிருக்கின்றார்கள் என்பது பாராட்டத்தகுந்த ஒன்றாகும். அந்த 40,000-க்கு மேற் பட்டவர்களில் நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கே.ஏ. நம்பியாரும் ஒருவர் என்பதை அறிகிற நேரத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சி யடைகின்றேன். அதைச் சொல்லி அவருக்கு மாவட்ட மக்களின் சார்பாக ஆடை களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி அவர் கள் அவர்களிலே ஒருவரா என்பது எனக்குத்தெரியாது. இதுவரையிலே இல்லாவிட்டால் இனிமேல் அந்த 40,000 பட்டியலில் இணைந்து கொள்ளுவார் என்று நான் எதிர் பார்க்கின்றேன். தென் ஆர்க்காடு மாவட்ட ஆட்சித்தலைவர் முயற்சியால் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆங்காங்கு இருக்கின்ற ஊராட்சித் தலைவர்கள், அலுவலர்கள் ஆகியோருடைய உதவியால், ஆசிரியர்களுடைய து ணையால், கிராம கிராம அதிகாரிகளுடைய உதவியால், பொது மக்களுடைய ஒத்துழைப்பால், 40,000 பேருக்கு கருத்தடை செய்யப்பட்டிருக்கிறது. 'பரவாயில்லை, 40,000 பேருக்குத்தானே கருத்தடை, அவர்களுக்கும் சேர்த்து, கருத்தடை செய்து கொள்ளாமலிருக்கிற நாம் குழந்தைகள்