பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 உற்பத்தி செய்வோம், என்று ஆரம்பித்து விட்டால், இது எங்கே போய் முடியும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். குடும்பக்கட்டுப்பாடு என்பது ஏதோ ஒருவார்த்தை அலங்காரச் சொல் அல்ல. குடும்பக் கட்டுப்பாடு குடும்பநலத் தின் அடிப்படையிலே எழுந்து, அது ஊர் நலம், மாநில நலம், இந்தியாவின் நலம் என்கிற அளவிற்கு விரிவடைகிறது. அதை யாரும் மறந்து விடக்கூடாது. நம்முடைய மக்கள் தொகை பெருக்கம் வெகு வேகமாக வளர்ந்து கொண்டு போகிறது. நாம் வேறு எதிலும் பெரிய முயற்சி எடுத்துக் கொள்ளாவிட் டாலும், இதிலே சிரமப்பட்டு பெரிய முயற்சி எடுத்துக் கொண்டு, எதைப்பெருக்கினாலும் பெருக்காவிட்டாலும், இதைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறோம்! இதை எடுத்துச் சொன்னால், இந்தக் கடமை அனைவருக் கும் இருக்கின்றது என்பதை புரியும்படி கூறினால், சிலபேருக்கு கோபம் வருகிறது. கட்டாயப் படுத்துகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். கட்டாயப்படுத்துவதை ஆதரிக்கவில்லை. ஆனால் நான் கேட்பதெல்லாம் ஏன் கட்டாயப்படுத்துகின்ற அளவுக்கு நாம் நடந்து கொள்ள வேண்டும். கட்டாயப்படுத் தாமலே கூட, நான் போய் அந்தக் காரியத்தைச் செய்கிறேன் என்கிற கடமை உணர்ச்சி ஒவ்வொருவருக்கும் வந்தாக வேண்டும். இது ஒரு பெரிய சமுதாயக்கடமை. மாவட்ட ஆட்சித் தலைவர் கட்டாயப்படுத்தினாலும், அல்லது அவர் களுக்குக் கீழே இருக்கின்ற அதிகாரிகள் க்கின்ற அதிகாரிகள் கட்டாயப்படுத் தினாலும், பஞ்சாயத்து யூனியன்களிலே இருக்கின்ற தலைவர் கள் கட்டாயப்படுத்தினாலும், நான் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. கட்டாயப்படுத்துவது எந்தக் காரியமானாலும் தேவை யில்லை. கட்டாயப்படுத்தினால் சரியில்லை. எனவே அந்த நிலை யில்லாமல், நாம் அனைவரும் கடமையைச் செய்ய வேண்டும் என்கின்ற உணர்வு நம்முடைய உள்ளத்திலே உந்தி எழவேண்டும்.

000,0P 00000