பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதமாச்சரியங்களைக் கடந்தது குடும்ப நலத்திட்டம் மிகச் சிறிய கிராமத்தில் தேவைகள் எவ்வளவு பெரிய அளவுக்கு இருக்கின்றன என்பதனை, இதுவரையிலே நிறை வேற்றப்பட்டுள்ள காரியங்களைத் தொகுத்துப் பார்த்தும், இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியவைகளை எண்ணிப் பார்த்தும், நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. இந் த இனிய விழாவில் குடும்ப நலத்திற்கான கண்காட்சி, கருத்துக் காட்சியாக அமைக்கப்பெற்று அதனையும் பார்த்து உணர்ந்து, இந்தப் பகுதியிலே உள்ள மக்கள் குடும்பக் கட்டுப் பாடு திட்டத்திலே வெற்றிகரமாக முன்னேறவேண்டும் என்ற உணர்வினை எழுப்பிடத்தக்க விதத்திலே, அதனையும் உருவாக்கி யிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பகுதியிலே பெரும்பாலும் வாழுகின்ற மக்கள், பேரணாம்பட்டுப் பகுதியானாலும் அல்லது இந்த நரியம்பட்டு போன்ற பகுதியானாலும், இஸ்லாமியச் சகோதரர்கள் தான் பெரும்பாலும் வாழுகின்றார்கள் என்பதை நான் நன்றாக அறிகிறேன். குடும்பநலத் திட்டத்தைப் பற்றி இஸ்லாமியச் சகோதரர் களுக்கு அல்லது வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது அல்லது அதிலே அவர்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதையெல்லாம் நான் விளக்கமாகச் சொல்ல வேண்டியதில்லை என்றே கருதுகின்றேன். சிறு பான்மையோராக இருந்தாலும், வேறு மதங்களைச் சார்ந்தோ ராக இருந்தாலும் இதிலே மதமாச்சரியங்களைக் கடந்து, எல் லாவற்றிற்கும் அப்பாற்பட்டு இதை ஒரு நாட்டுப் பிரச்னை யாக எல்லா மதத்திலே இருப்பவர்களும் கவனிக்க வேண்டு மென்று கேட்டுக்கொள்கின்றேன். இஸ்லாமியரும் குடும்பநலமும் இந்தியாமீது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த நேரத்தில், பாகிஸ்தானத்திலே இருப்பவர்கள் இஸ்லாமியர்களாயிற்றே; தியாவில் இருக்கின்ற ற இஸ்லாமியர், பாகிஸ்தானத்திலே ருக்கின்ற இஸ்லாமியர் பக்கம்தான் இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எள்ளளவும் உள்ளத்திலே ஏற்படாமல் இந்தியா நம்முடைய நாடு என்ற உணர்ச்சியோடு, பாகிஸ்