பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தான் படைவீரர்களை எதிர்த்து நின்று, பாகிஸ்தான் நாட் டைப் புறங்காணுகின்ற அளவுக்கு அத்தகைய வியத்தகு வீரத்தைக் காட்டியவர்கள், இந்தியாவிலே உள்ள உள்ள இஸ்லாமி யப் பெருமக்கள் என்பதை நான் மிகுந்த நன்றி உணர்வோடு எடுத்துக் காட்டவும் விரும்புகின்றேன். எப்படிப் பாகிஸ்தானத்துப் படை எடுப்பு இந்தியாவின்மீது ஏற்பட்ட நேரத்திலே நீங்கள் மதத்தை ஒரு புறத்திலே ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டை முன்னிறுத்திப் பாடுபட்டீர்களோ அதுபோல், ஏன், அந்தப் படைஎடுப்பைவிடப் பயங்கரமானது தான் இன்றைக்குக் குடும்பநிலை கு லை வுற்று, கு குடும்பங்கள் பெருகி, மக்கள் தொகை அதிகமாகி, ஆண்டுதோறும் கோடிக் கணக்கான மக்கள் இந்தியாவில் பிறக்கிறார்கள். அவர்கள் தொகை அதிகமாகிக் கொண்டே வருகிறது என்றால், பாகிஸ்தான் படை எடுப்பைவிட-சீனப்படை எடுப்பைவிட- நமக்கு நாமே நாட்டிலே ஒரு பாதுகாப்பற்ற நிலையை உருவாக் கிக் கொள்கிறோம் என்ற நிலைமையிலே அதிகமானதாகும். ஆகவே படை எடுப்புக்களால் நம் நாடு தொல்லையுறாமல் நாம் எவ்வளவு அக்கறை கொள்ளு கிறோமோ, அதைப்போலவே தான் நம்முடைய வீடுகளிலே ஆண்டுதோறும் குழந்தைகளுடைய 'பிறப்பு' என்கின்ற படை எடுப்புக்களால் நாடு சேதமுறாமல் பார்த்துக்கொள்ள வேண் டிய பெரும் பொறுப்பை, மதங்களைக் கடந்து, நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்த வகை யிலே எல்லோரும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்பதிலே க இந்து மதக் கருத்து என்று அது கட்டுப்பாடு இந்து மதத்திலேகூட, இந்தக் குடும்பக் குடும்பக் செய்து கொள்வதை ஒரு காலத்தில் பாபகரமாகத்தான் பல பேரும் கருதினார்கள். இன்னுஞ் சொல்லப்போனால், இப்படிப் பட்ட முறைகள் கூடாதென்று உத்தமர் காந்தியடிகளே கூடச் சொன்னார்கள். குடும்பக் கட்டுப்பாட்டிற்குக் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது-மனக் கட்டுப்பாடுதான் தேவை மகாத்மா காந்தியடிகளேகூடச்சொன்னார்கள் என்றா லும், அந்தக் காந்தியடிகளுடைய வாரிசுகளாக வந்த பண்டித ஜவஹர்லால் நேருவோ, லால்பகதூர் சாஸ்திரியோ, இன்றைக் குப் பிரதமராக இருக்கின்ற இந்திரா காந்தி அம்மையாரோ அல்லது காந்தியடிகள் கொள்கைகள் பலவற்றை ஏற்றுக் கொண்டிருக்கின்ற - அவர்கள் தொண்டர்களாக இருந்த, பல ஆளுகின்ற பொறுப்பிலே உள்ளவர்களோ, யாரும் காந்தியடி கள் சொன்னதுதான் போதுமானது என்ற அளவுக்கு எடுத் துக்கொள்ளவில்லை. இந்தியாவினுடைய மக் கள் பெருக்கத்தைக் குறைக்க வேண்டுமேயானால் சிகிச்சை முறைகளை நாம் மேற்கொண்டாக வேண்டும். நவீன முறைகளை - நவீன உத்திகளைப் பயன்