பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 பிறகு முதல் குழந்தை கவனிப்பாரற்றுப் போகும்! அதற் கடுத்த குழந்தை பிறந்தால் இரண்டாவது குழந்தை கவனிப்பா ரற்றுப்போகும். நாலைந்து குழந்தைகளானால் நாலைந்து குழந் தைகளும் கவனிப்பாரற்றுப்போகும். , ஏழை வீட்டில்-எளியவன் வீட்டில்-சாதாரண வருவாய் உள்ளவனுடைய வீட்டில்-ஒரு குழந்தை, இரண்டு குழந்தை என்றால், இரண்டையும் ஒழுங்காகப் படிக்க வைக்கமுடியும். இரண்டுக்கும் ஒழுங்காகச் சத்துணவு வழங்க முடியும். இரண் டையும் பட்டினி இல்லாமல் பாதுகாக்க முடியும். அவை பெருகிவிடுமேயானால் குழந்தைகளும் அரைப்பட்டினி, தாயா ம் தகப்பனாரும் முழுப்பட்டினி என்கின்ற அளவுக்குத்தான் குடும்பங்கள் நடைபெறும். ஆகவே இந்தக் குடும்பக் கட்டுப் பாட்டில் எந்தவிதமான பாபமும் கிடையாது. ரு அண்ணா சொன்னார் அறிஞர் அண்ணா அவர்கள், குடும்பக்கட்டுப்பாடு விழா ஒன்றில் பேசுகிற நேரத்தில் மிக அழகாக ஒன்றைச் சொன்னார் கள். 'ஆண்டவனேகூடக் குடும்பக் கட்டுப்பாட்டில் மிகச் செம்மையாக நடந்துகொண்டிருக்கிறார் என்று சொல்லி, நம் முடைய பெரிய கடவுள் என்று சொல்லப்படுகின்ற சிவபெரு மானே கூட, இரண்டே பிள்ளைகளைத்தான் பெற்றார்-ஒன்று பிள்ளையார், இன்னொன்று முருகன் என்று சொன்னார். சிவபெருமானாவது இரண்டு வது இரண்டு பிள்ளைகளைப் பெற்றார். பிள்ளை யார் பிள்ளைகளையே பெறவில்லை. முருகன் பிள்ளைகள் பெற்ற தாகப் புராணம் கிடையாது. எனவே கடவுள்களேகூடக் குடும்பக் கட்டுப்பாட்டை ஒழுங்காக நிறைவேற்றியிருக்கும் பொழுது, நாம்-மனிதர்கள், அதை நிறைவேற்றக் கூடாது- நிறைவேற்றுவது பாபம் என்று கருதுவது தவறான கருத்தா கும். குடும்பக் கட்டுப்பாட்டை நிறைவேற்றாத கடவுள்கள் எல்லாம் என்ன பாடுபட்டார்கள் என்பதைப் புராணமே சொல்லுகிறது. 27 குழந்தைகளுக்குத் தந்தையான குசேலன் என்ன ஆனான்? அவன் கடைசியாக கிருஷ்ணபரமாத்மாவைத் தேடிச் சென்று, குபேரன் ஆனான் என்று புராணம் படிக்கி றோம். நான் கேட்கிறேன், ஒவ்வொரு கிராமத்திலேயும் உரு வாகிற குசேலர்களுக்கெல்லாம், ஒரு கிருஷ்ணபரமாத்மா கிடைப்பாரா, அவலை வாங்கிச் சாப்பிட்டு அரண்மனைகளையும் மாளிகைகளையும் கட்டித்தர! து அதைப்போலவே நாரத மகாமுனிவர், பெண்ணுருவம் எடுத்து அறுபது குழந்தைகளைப் பெற்றார். பெற்ற காரணத் லேதான் தம்புரா தூக்கிக் கொண்டு ஊரெல்லாம் அலைந் காண்டிருக்கிறார் என்று புராணத்திலே படிக்கிறோமேயல்லா மல், அறுபது குழந்தைகளோடு அவர் ஒழுங்காக வாழ்ந்தார் என்று நாம் படிக்கவில்லை. எனவே புராணத்திலேயே நமக்கு நல்ல எடுத்துக்காட்டு இருக்கிறது. அதிகக் குழந்தைகளைப்