பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவர் கவனத்துக்கு...! பெருகி வரும் பக்கள் தொகையை ஒரு அளவில் கட்டுப் படுத்துவதற்கு நாம் ஒவ்வொருவரும் மிகுந்த அக்கறையுடன் பணியாற்ற வேண்டும். குடும்பநலத் திட்டத்தை ஆர்வத் துடன் அமுலாக்க வேண்டும். 1971-72-ல் தென் ஆர்க்காடு, தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியாளர்களும், சம்பந்தப்பட்ட அதிகா காரிகளும் ஆற்றிய பணி போற்றுதற்குரியது. பாமர மக்களிடத்திலும், படித்தவர்களிடத்திலும், அறுவை சிகிச்சைமுறை பற்றியுள்ள ஒருவித பயத்தை நாம் அறவே நீக்கி விட்டதாகச் சொல்வதற் கில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அறுவை சிகிச்சை யில் ஏற்படுகின்ற சிறு கோளாறுகள் அந்தப் பயத்திற்குக் காரணமாக இருக்கலாம். ஆகவே குடும்பநலத் திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், தாங்கள் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சைகளில் நூற்றுக்கு நூறு வெற்றி காண வேண் டும். ஏழை எளிய மக்களிடம் அறுவை சிகிச்சைக்குப்பின் மருத்துவமனைகளில் அக்கறையுடனும், அன்புடனும் கவனிக்கி றார்கள் என்ற எண்ணம் பரவ வேண்டும். இப்பணியில், ஈடு பட்டுள்ளவர்கள், ஒளிமிக்க எதிர்காலத்தை இந்நாட்டிற்கு உரு வாக்கிக் கொடுக்கும் தொண்டில் ஈடுபட்டுள்ளோம் என்ற எண் ணத்துடன் பணியாற்ற வேண்டும். குடும்பநலத் திட்டத்தை இன்னும் திறம்படச் செயலாற்ற வேண்டும்.