பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோய்கள் பெருகுவதேன்? ம ருத்துவமனைகளை விரைவாக CONGO வசதியாக - கட்டிட வேண்டும். அவற்றில் நவீன கருவிகள் இடம் பெறவேண்டும் என்ற முனைப்பு அரசுக்கு உண்டு. அதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவமனைகள் மட்டும் நமது நோய்களைத் தீர்த்து விடாது. நோய்வருமுன் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு நமது வாழ்வை உருவாக்கிக் கொள்ளவேண்டும். இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு நிறையத் தேவை. அதைக் கடைப்பிடித்தால் மருத்துவமனைகளின் தேவை குறையும். மருத்துவமனைகள் வசதி அதிகரிப்பது ஆட்சியின் சாதனை தனை என்கிற நேரத்தில் "பார்த்தீரா எப்படி நோயாளிகள் பெருகி இருக்கிறார்கள், இந்த ஆட்சியில்!” என்று மறை முகமாக அதுவே எடுத்துச் சொல்லும். கூடுமானவரை மருத் துவமனைகள் தேவை குறையும் வகையில் மக்கள் தங்கள் வாழ்வை ஆரோக்கியமாக அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாகவும் நோய் பெருகு கிறது. சென்னையில் சைதாப்பேட்டை பகுதியில்தான் அதிக மக்கள் தொகைப் பெருக்கம். 1967-ஆம் ஆண்டு தேர்தலில் நான் சைதைத் தொகுதியில் நின்றபோது இருந்த வாக்காளர் களைவிட மேலும் அரைப்பங்கு அதிகமான வாக்காளர்கள் 1971-ஆம் ஆண்டு தேர்தலில் ஆகிவிட்டார்கள். சைதாப்பேட்டையில் மாத்திரமல்ல, சென்னையில் பல இடங்களில் பல தொகுதிகளில் மக்கள் பெருக்கம் அந்த அள விற்கு வளர்ந்திருக்கிறது. வருகின்ற மாநகராட்சி மன்ற தேர் தலில் கூட இப்போதுள்ள 120 வட்டங்கள் இன்னும் அதிக மாக ஆகவேண்டுமென்ற அளவிற்கு ஆலோசனைகள் நடை பெறுகின்றன. பெருகும் காரணம் இந்தப் பெருக்கத்திற்குக் காரணம் நம்முடைய நாவலர் எடுத்துச் சொல்வதைப் போல, தனி மனிதர்களின் முயற்சி மாத்திரமல்ல! வெளியூர்களிலிருந்தும், கிராமப் புறங்களுலிருந்