பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெரிய பெரிய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற நம்முடைய நாட்டிலே குடும்பநலத் திட்டம் நல்ல முறையிலே இயங்கியாக வேண்டும். அந்தக் காரணத்தினாலேதான், இரண்டு வெற்றிகரமான திட்டங்களை மகிழ்ச்சியோடு நாம் இங்கே நடத்தி-நிறைவேற்றிக் கொண்டாடுகிற நேரத்தில் குடும்ப நலத்திட்ட முனைப்பு இயக்கத் துவக்க விழாவினையும் நாம் இதிலே இணைத்திருக்கிறோம். கண்ணொளி பெற்றவர்கள் கிட்டத்தட்ட ஐநூறுக்கு மேற் பட்டவர்கள் இந்தப் பந்தலிலே இருக்கின் றீர்கள். வட ஆர்க் காடு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெரியவர் கள் இங்கே குழுமியிருக்கின்றீர்கள். உங்களையெல்லாம் காணு கின்ற நேரத்தில் நான் ஒரு புதிய உணர்ச்சி பெறுகிறேன். நீங்கள் கண்ணொளி பெற்று களிப்படைகின்ற நேரத்தில்,என் னுடைய உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. உள்ளமெல்லாம் புளகாங்கிதம் அடைகிறது. இதற்கு முன்பு இது து போன்று ஏன் நடைபெறவில்லை? இன்றைக்கு மாத்திரம் நடைபெறுவ தற்கு என்ன காரணம்? என்று கேள்விகளை உங்களுக்குள்ளா கவே கேட்டுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் இங்கே பேசிய நண்பர்கள் சுட்டிக் காட்டினார்கள்! ஏ சுட்டிக் காட்டிய நேரத்தில் நண்பர்கள் கொஞ்சம் உருக்க மாகக்கூடச் சொன்னார்கள். வேகமாகக் கூடச் சொன்னார்கள்! வர்களு க்கெல்லாம் கண்ணொளி வழங்குகின் றீர்கள்; நாட்டில் தையும் கிண்டல் செய்கிற, கேலி செய்கிற சில குருடர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு நீங்கள் கண்ணொளி வழங்க வேண்டும் என்றெல்லாம் கூட என்னிடத்தில வேண்டுகோள் விடுத்தார்கள். நான், கண் பார்வையற்றவர்களுக்கு க் ணொளி வழங்குகின்ற திறமையான டாக்டர்களைத்தான் கை வசம் வைத்திருக்கிறேன் அல்லாமல் அப்படிப்பட்டவர்களுக்குக் கண்ணொளி வழங்குகிற திறமை படைத்த டாக்டர்கள் யாரும் என்னிடத்திலே கைவசம் ல்லை என்பதை, அந்த நண்பர் களுக்கெல்லாம் மிகுந்த விநயத்தோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். கண்பார்வை இழந்தோர் கண் தமிழகத்தில் மாத்திரம் கண் பார்வை இழந்த முதியோர். இளையோர், ஏழைகள், கிராமப்புறத்து மக்கள் என்கின்ற வகையில் பத்து லட்சம் பேர் இருக்கின்றார்கள். அவர்களுக் கெல்லாம் கண் பார்வை வழங்க வேண்டுமென்ற திட்டத்தை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. அதற்கான திட்டத்தைச் செயல்படுத்துகின்ற நேரத்தில், இது அரசு மாத்திரமே தனி யாக நின்று செய்கின்ற காரியமாக அல்லாமல், அந்தந்தப் பகு தியிலே இருக்கின்ற மக்களுக்கும் அதிலே ஒரு தொடர்பு ருக்கவேண்டும், அவர்களுடைய சேவைக்கும் அதிலே ஒரு டங்கு இருக்க வேண்டும். அவர்களுக்கும் இதிலே பொறுப்பு