பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திட்டமிட்டிருக்கிறோம். இந்த மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டு கண் அறுவை சிகிச்சைகளை முடி கண்ணாடி வழங்குவதற்காக மாவட்டத்தினுடைய ஆட்சித் தலைவர் அவர்கள் என்னிடத்திலே ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் இன்றைக்கு மூன்று லட்சம் ரூபாய் தந்தார். ஏற்கனவே இரண்டு லட்ச ரூபாய் தரப்பட்டிருக்கிறது,ப.உ.சண்முகம் அவர்களிடத்தில்! ஆக இந்த மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப் பட்ட தொகையைவிட 2 ஆயிரம் ரூபாய் அதிகமாகவே கிடைத்திருக்கிறது. புதிய மாவட்ட ஆட்சித் தலைவர், நல்ல இளமைத் துடிப்போடு காரியங்களை ஆற்றக் கூடியவர்! ஐந்து லட்சம்தானா என்று கேட்க மனம் தூண்டுகிறது. அப்படிக் கேட்டதற்காகக் கட்டாய வசூலில் இறங்காமல், யாராவது வலிய வந்து கொடுத்தால் அந்தப் பணத்தையும் பெற்று, இந்த ஆண்டிலே 10 ஆயிரம் பேருக்குக் கணக்கு இருந்தாலும் 15 ஆயிரம் பேருக்கு அறுவைசிகிச்சைகளைச் செய்து, கண்ணொளி வழங்கினோம் என்ற அந்தத் திட்டத்தினுடைய வெற்றியை அவர் எனக்குக் காட்ட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். என்னைப் பெற்ற ஏழைகள்! கிராமப்புறங்களிலே இருக்கின்ற ஏழை எளிய மக்க ளுடையை அவதி எனக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், நானும் கிராமத்திலே இருந்து. ஒரு காலத்தில் பட்டிணத்தில் குடியேறியவன்தான். கிராமத்திலே சாதாரண மக்களோடு பழகக் கூடிய வாய்ப்பை அன்றைக்கும் பெற்றிருந்தேன்; இன் றைக்கும் பெற்றிருக்கிறேன்; என்றைக்கும் பெற்றிருப்பேன். என்னுடைய தாயோ, தந்தையோ, பெரிய மிட்டாமிராசு குடும் பத்திலே பிறந்தவர்கள் அல்ல. என்னுடைய தந்தை சங்கீ தத்திலே திறமை படைத்தவராக இருந்தாலும், ஒரு ஏழை விவசாயியைப் போலத்தான் உழைத்துக் கொண்டிருந்தார். எங்கள் வயலில், எங்கள் தந்தையே கலப்பைப் பிடித்து உழுத காட்சியையும், என்னுடைய தாயாரே நடவு நட்ட காட்சியை யும் கண்ட கண்கள் தான், இந்தக் கண்கள்! ஆகவே விவசாயக் குடும்பத்திலே பிறந்து. விவசாயிகளுடைய வேதனைகளைத் தெரிந்து, விவசாயப் பெருங்குடி மக்கள் கிராமப்புறத்திலே விஞ்ஞான நிலைகள் பரவாத காரணத்தினால், தங்களுடைய கண்ணுக்கு வந்திருக்கின்ற நோய் - தங்களுடைய கண்ணிலே ஏற்பட்டிருக்கின்ற பார்வை மங்கல், வைகளெல்லாம்கூட, ஏதோ ஆண்டவனால் ஏற்பட்டது - இதைத் தீர்க்கவே முடியாது - ஒவ்வொரு நாளும் சூரியநமஸ்காரம் செய்தால் இது போய்விடும் என்றெல்லாம் கருதிக் கொண்டு, இன்றைக்கும் கிராமப்புறத்திலே ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். அவர் களுக்கெல்லாம் நாம் எடுத்துச் சொல்லியாக வேண்டும்-அப் படிச் சொல்லுகின்ற முயற்சிதான் இந்தத் திட்டம்! நீங்கள் கிராமத்திலே இருக்கிறீர்கள்! தனியாக டாக்டரிடம் சென்று கண்ணைக் காட்டி, சிகிச்சை பெறவேண்டுமேயானால் குறைந்தது