பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பினால் மிகுவது பதைப்பேயாகும்! தலைவி என்பாள் தலைவிதியை எண்ணிக் கொண்டு கிடப்பவளோ? இல்லை! இல்லை!-- - தன் தலைவிதியை மாற்றுதற்குத் தோழியினைத் தூதாக்கி செவிலியையும் தோதாக்கி தென்றல் சுமந்து வரும் காதலனை - நின்று சுடும் நிலவினிலே வரவேற்கக் காத்திருப்பாள்- -D ப்ாய தோழன் என்றும் துரோகியான தில்லை அகப்பாட்டில்! புறப்பாட்டில் துரோகி உண்டு - அவன் ஆரம்பப் புறப்பாட்டிலேயே அது வெளிச்சமாகும்! ஊரார் பழிப்புக்குக் காதல் ஒளிந்து மறைவதில்லை- ஆனால் இன்று ஊரார் எதிரிலேயே கடற்கரையில்- காருக்குள்- கலையரங்கில் காதல் சேட்டை என்ன நியாயம்? ஊரார் எல்லாம் ஊனமுற்ற விழி படைத்தோர் எனும் நினைப்போ? அன்றிக் காதலர்கள் கண் மூடிக் கொண்டதாகத் துணிதல் நன்றோ?