பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் நலம்பெற...! . இயல்பாக நடந்து வரும் குடும்பநலப்பணிகளை முனைப் போடு செயல்படுத்த, பல்வேறு வகையான முறைகளில் துரித மாகச் செயலாற்ற இருவார விழாக்களைப் பயன்படுத்திக் கொள்வது தமிழகத்தின் வழக்கம். மற்ற மற்ற துறைகளின் நிறைவேற்றத்தில் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றுள்ள தமிழ்நாடு, குடும்பநலத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல் படுத்தும் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகவும் இருந்து வருவதை அனைவரும் அறிவர். தமிழக அரசின் ஆர்வம் சென்ற ஆண்டுகளில், (1971-72, 1972-73) குடும்பநலத் திட்ட முனைப்பு இயக்கங்களை நடத்தி, இந்திய அரசு தமிழ் நாட்டிற்கு என வகுத்தளித்த இலக்கையும் விஞ்சிய பெருஞ்சாதனையை ஏற்படுத்தினோம். ஆனால் இந்த ஆண்டு? இந்திய அர சுக்கு எதிர்பாராத வகையில் ஏற்பட்டநிதி நெருக்கடி காரண மாகக் குடும்பநலத்திட்டச் செயலாக்கத்திற்கென ஒதுக்கப் பட்டதொகையில் வெட்டினை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் காரணமாகச் சென்ற ஆண்டு முனைப்பு இயக்கம் நடந்த போது அறுவைச் சிகிச்சை ஒவ்வொன்றிற் கும் ரூ. 100 வரை நிதி உதவியது போல இந்த ஆண்டு தர இயலாது என மத்திய அரசினர் அறிவித்துவிட்டனர். தமிழ கத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களையொட்டியோ அல்லது தனித்தோ, கட்டப்பட்டுக் கொண்டிருந்த குடும்ப நலத் திட்டக் கட்டிடங்களின் கட்டிட வேலைகளும் நிறுத் தப்பட வேண்டுமென்றனர். ழ நிதி நிலை காரணமாகக் குடும்பநலத்திட்டப் பணிகள் குந்தகப் பட்டுப் போகக்கூடாது. அந்தப் பணியிலே முடக்கம் ஏற்பட அனுமதித்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் பெரும் பிரச்னையாக மாறும்; மற்ற மற்ற வளர்ச்சிப்பணிகளால் உரு வாகும் நல்ல பலன்கள் அளவுக்கு அதிகமான மக்கள் தொ கைப் பெருக்கத்திற்கு இணைந்து சென்று ஈடுகொடுக்க முடியாமல், நாட்டவர்க்கு நற்பயனளிக்க ஊரெங்கனும் சுற்றி, ஓடிவரும் ஆறு,கடலோடு கலந்து விட்ட பின்பு உருத்தெரியாமல் போய் விடுவது போல வீணாகிவிடும்; அத்தகைய நிலையை அனுமதிக்க விரும்பவில்லை, இத்திட்டச் செயலாக்கத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள நமது அரசு.