பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 ஆகவே குடும்ப நலத்திட்டக் கட்டிடங்கள் பாதியிலேயே நின்று விடக்கூடாது என்ற எண்ணத்தில், கட்டிடப் பணிகளைத் தொடர்ந்து நடத்தி முடிக்கத் தமிழ்நாடு அரசு, தன் நிதியிலி ருந்து ஏறத்தாழ முப்பது லட்ச ரூபாய் வரை ஒதுக்கித் தந்து உதவியுள்ளது. அறுவைச் சிகிச்சை செய்து கொண்டோருக்கு வழக்கமாகக் கொடுக்கப்பட்டு வரும் ஈட்டுத் தொகை முப்பது ரூபாயை, அறுபது ரூபாயாக உயர்த்தியுள்ளது. அது மட்டுமா? அறுவைச் சிகிச்சையில் மற்றவர்களை ஈடுபடுத்துபவர்களுக்கு, ஒவ்வொரு அறுவைச் சிகிச்சைக்கும் ஊக்குவிப்புத் தொகை யாக கொடுக்கப்படுகிறதே பத்துரூபாய்- அதுவும் நம் நிதியிலி ருந்துதான் தரப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவ நிலை யங்களுக்கு, அங்கு நடக்கும் ஒவ்வொரு ஆண் அறுவைச் சிகிச்சைக்கும் பத்து ரூபாயும், ஒவ்வொரு பெண் அறுவைச் ண் சிகிச்சைக்கும் இருபத்தைந்து ரூபாயும் தமிழக அரசு நிதியி லிருந்து மான்யமாகத் தரப்படுகிறது. சிகிச்சை செய்து கொண்டோருக்குத் இது அறுவைச் தரப்படும் தாகையைத் தவிர தனியாக வழங்கப்படுவதாகும். தொழிலாளருக்குச் சலுகை . ஈட்டுத் மேலும் தொழிலாளர் நலம் பேணும் நமது அரசு- பொதுத் துறையில் தொழிலாளர்களையே பங்குதாரர் களாக்கும் புரட்சிகரத் திட்டத்தைச் செயல் படுத்தும் நமது அரசு - தொழிலாள நண்பர்களிடையே குடும்பநலத் திட்டத் திற்கு ஆக்கந்தேட வேண்டி, தனியார் துறையிலும், பொதுத் துறையிலும் உள்ள தொழில் நிறுவனங்களுக்கெல்லாம் வேண்டுகோளொன்று அனுப்பி வைத்துள்ளது. அதில், வழக் கமாக அளிக்கப்படும் ஈட்டுத்தொகையோடுகூட, அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் பெண் தொழிலாளிக்கு நானூறு ரூபாயும்,ஆண் தொழிலாளிக்கு இருநூறு ரூபாயும் அந்தந்தத் தொழில் நிறுவனங்களே தந்துதவி ஊக்க மூட்டினால், தொழி லாளத் தோழர்கள், நிரந்தரக்கருத்தடை ஏற்றுச் 'சிறு குடும்ப நெறி' ஏற்கப் பெருவாரியாக முன் வருவார்கள் எனத் தெரி வித்துள்ளது. ம் ந்த த அளவுக்கு இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட கணிச மான தொகையைப் பல்வேறு தொழில் நிறுவனங்களும், ஆலை நிர்வாகங்களும், தோட்டத் தொழில் நிலையங்களும் ஏற்கனவே தங்கள் நிதியிலிருந்து ஊக்கத்தொகையாக அளித்து வருகின் றன. நமது அரசின் வேண்டுகோளுக்குப் பின், அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு ஓரளவுக் காவது ஊக்கத் ஊக்கத் தொகை வழங்க மேலும் பல மேலும் பல தொழிலக நிர்வாகங்கள் முனைந்து கொண்டிருக்கின்றன.