பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுவாக கும் நாம் இருவர் நாம் பெறுவதும் இருவர் நல்ல குடும்பம் பல்கலைக் கழகமென்றார் பாரதிதாசன். பல்கலைக் கழகத்து மாணவர் எண்ணிக்கை போல் குடும்பத்தில் பிள்ளைகள் தொகை கூடிட வேண்டும் என்பதல்ல அதற்குப் பொருள். அறிவும் திறனும் செறிந்த அழகோவியச் செல்வங் கள் ஒன்றிரண்டு பெற்று, மனைத்தலைவனும் இல்லத்தரசியும் இன்புற்று வாழ்வதையே பல்கலைக் கழகத்திற்குப் பாவேந்தர் ஒப்பிட்டார் என்ற உண்மையை அனைவரும் உணர்ந்திட வேண் டும். குறிப்பிட்ட வருமானமுடைய ஒரு குடும்பத்தில் ஆண்டுக் கொரு குழந்தைவருமானமும் பெருகிவிடுமானால், வசதிகளும் வாய்ப்புகளும் எல்லாக் குழந்தைகளுக்கும் பங்கிடப்பட்டேயாக வேண்டும். எட்டு ரொட்டித் துண்டுகளை இரண்டு குழந்தை களுக்கு நாலுநாலாகப் பிரித்துக் கொடுத்து, அவை மனநிறை வோடு உண்டது கண்டு உளங்களிக்கும் தாயும் தந்தையும், அதே எட்டு ரொட்டித்துண்டுகளை ஆறு களுக்குப் பங்கிட்டு, அவர்களும் ஆறுதல் பெறாமல், குழந்தை குழந்தை களும் களிப்படையாமல் அவதிப்படும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டாமா? வீடும் நாடும் து - - ம வீட்டின் நிலையே இது எனில். நாட்டின் நிலையை சிந்திப்பது இன்றியமையாத ஒன்றல்லவா? கோடிகோடியாகச் செலவழித் த் திட்டங்கள்- கோபுர உயரத்தில் உணவுதானியக் குவியல் கள் கோலமிகு சாலைகள் - குளிர் தரும் சோலைகள் சோலைகள் - கல்விச் சலுகையா, கணக்கின்றி வழங்குவோம் - மருத்துவ வசதியா, தடையின்றித் தருகின்றோம்-பின் தங்கியோர் நலனா, விரைந்து நிறைவேற்றுவோம் - தாழ்த்தப்பட்டோருக்கு உயர்வா, தடை யில்லை அளிப்பதற்கு! எல்லாம் சரி; எட்டு ரொட்டித்துண்டு: இரண்டே குழந்தை கள் என்றால் வழங்குபவருக்கும் மகிழ்ச்சி பெறுபவருக்கும் பேரானந்தம். ரொட்டித்துண்டு எட்டுத்தான், குழந்தைகள் ஆறு எனில், ரொட்டியும் எட்டியாகுமே, தேவைக் கேற்ப கிடைக்காத காரணத்தால். LUOR