பக்கம்:பிள்ளை வரம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 ទ្រិញុំ ខ្ញុំ ១ រ៉ា பற்றிப் பலவகையாகப் பேசலாயினர். அவர் களுக்குச் சமாதானம் கூறிக்கொண்டிருந்தால் உனக் குச் சரியான வயதும் அறிவும் வராத முன்பே உனக்கு இந்த ரகசியத்தை வெளியிடவேண்டி நேரிடு மென்று கருதி நான் பேசாமல் இந்த ஊருக்கு வந்து - * * 3. • நிம்மதியாகக் காலம் கழிக்கலானேன். 'நமது சமுகத்திலுள்ள ஊழல்களேயெல்லாம் நீய்ே அறிந்துகொள்ள வேண்டுமென்பது என் விருப்பம், அதற்காகவே நான் உன்னைச் சென்னைக்கு அனுப்பினேன்; கல்லூரிப் படிப்பில் நன்மை உண் டாகுமென்று நான் கருதவில்லே. ஆனல் அங்கு நீ பல அறிஞர்களோடு பழகவும், அவர்களுடைய கருத்துக்களேத் தெரிந்துகொள்ளவும், சமூக சீர் திருத்த இயக்கங்களைக் கவனிக்கவும் இடம் உண் L് ഖഖ?? நீ எப்பெண்மணியிடம் காதல் கொண்டாலும் சாதிமத வேறுபாடுகளைக் கவனியாமல் மணந்து உலகில் பிறருக்கு ஒர் எடுத்துக்காட்டாக வாழ வேண்டுமென்பதே என் முழு விருப்பம். "அருளு, பிறப்பைக் குறித்து நீ உன்னை இழிந் தவனென்று கருதுவாயாளுல் உன்னைப்போன்ற முட்டாள் உலகில் வேறு எவரும் இல்லை. உண்மை யில் பிறப்பிளுல் உயர்வு தாழ்வு ஏற்படுவதே இல்லை. பழங் கொள்கைகளை இந்த விஷயத்தில் நம்ப வேண்டாம். அவைகளெல்லாம் இந்த நூற்ருண்டுக்கு உதவா. "எனது செல்வமனேத்தையும் உனக்கு எழுதி வைத்திருக்கிறேன். நீ காதலிக்கும் பெண்ணையே மணந்து தாய்நாட்டுச் சேவை செய்து வாழ்வாயாக. உன், சாடி மீப் பிள் னே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/139&oldid=825056" இலிருந்து மீள்விக்கப்பட்டது