பக்கம்:பிள்ளை வரம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

하 154 பிள்ளே வரம் & ஒரு சமயம் நான் எனது உளவியல் பேராசிரி பரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரிடம் விசவநாதன் இப்படி அடிக்கடி உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகச் சொல்லுவதைப் பற்றி எடுத்துரைத்தேன். அவர் சொன்குர்: 'ேஇது ஒரு மாதிரியான தற்கொலே மனப்பான்மை. எளிதாகத் தன்னிடம் பிறர் பரிவு காட்டவேண்டுமென்ற. மறைமுகமான ஆசையால் ஏற்படுவது) என்று. "இதைப் போக்குவதற்கு வழியில்லையா?” என்று ஆவலோடு கேட்டேன். - "போக்கலாம். அதற்கு அவனுடைய குழந் தைப் பருவத்தைப் பற்றி நன்ருகத் தெரிய வேண்டும்.’’ "எதற்காக?” சிறுவயதில் ஏற்பட்ட நடத்தையே இந்த மனப்பான்மைக்கு அடிப்படையான காரணமாக இருக்கும். அந்தப் பையன் இளமையிலே தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளக் கீழே தரையில் விழுந்து புரண்டு கொண்டிருந்திருப்பான். அப்படிச் செய்தால் தாய் உடனே அவனுக்கு வேண் டியதை யெல்லாம் கொடுத்து விடுவாள். அந்த வெற்றியானது அடி மனத்திலே வேரூன்றி அவனுக்கே தெரியாமல் இருந்திருக்கிறது” என்று இந்த விதமாக என்னென்னவோ பேசத் தொடங்கி விட்டார். அவரிடமிருந்து விடைபெற்றுத் தப்பி வருவதே கஷ்டமாய்விட்டது. அதுமுதல் இதைப்பற்றி நான் யாரிடமும் மூச்சுவிடுவதே இல்லை. ஆனல் நேற்றுக் காலையில் அவன் கடலில் விழுந்து தற்கொலே செய்து கொள்ளப் போவதாகச் சொன்னவுடன் எனக்கு என்றும் இல்லாத பயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/155&oldid=825074" இலிருந்து மீள்விக்கப்பட்டது