பக்கம்:பிள்ளை வரம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 ເiດr vii ■ ບໍ່ விடுவதாகப் பயமுறுத்துபவரைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கை முழுவதும் யார் தொல்லைப் படுவது?’ என்று முடிவாகச் சொல்லிவிட்டாள் விசுவநாதனுக்கு விஷயத்தை மறைத்துப் பதில் சொல்லுவது கஷ்டமாய்விட்டது. ஆகவே, அவ னிடம் வேறு வகையில்லாமல் உண்மையை உளறி விட்டேன். "ஆகா, அப்படியா சொன்னுள்? நான் சும்மா பயங்காட்டுகிறேன் என்பதுதானே அவள் நினைப்பு? இதோ பார்; நான் நேராகக் கடலில் போய் விழுந்து விடுகிறேன்” என்று எழுந்து அவன் ஒடத் தொடங் கிஞன். - நான் தடுத்தேன்; 'டேய், காதல் என்பதே தெரியாத நீ என்னைத் தொடக்கூட தகுதியில்லா தவன்” என்று சொல்லி, எதிர்பாராத விதமாக என் முகத்தில் ஒரு குத்து விட்டான். அப்படியே மயங்கி விழுந்துவிட்டேன். உணர்வு வந்து நான் எழுந்தபோது அங்கே விசுவநாதனைக் காணுேம். இதற்குள்ளே இறந்துவிட்டானே என்னவோ என்று கூவிக்கொண்டே கடற்கரைக்கு ஓடினேன். அங்கேயும் விசுவநாதனைக் காணவில்லை. மணி இரண்டு இருக்கும். கடற்கரையில் நடமாட்டமே இல்லை. ஒன்றிரண்டு செம்படவர்கள் மட்டும் தங்கள் வலைகளைச் செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள், பஐயா, இங்கே என்னைப் போல வாலிபன் ஒருவன் வந்தாளு?” என்று ஒருவனக் கேட்டேன். "எத்தனையோ பேர்வருகிருர்கள், போகிரு.ர்கள். நாங்கள் என்னத்திற்கு அவர்களைக் கவனிக்கிருேம்?” என்று அவன் பதில் சொல்லிவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/160&oldid=825080" இலிருந்து மீள்விக்கப்பட்டது