பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

157




அன்னம் தந்த விளக்கம்

பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமவள் தன்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்கள்-காமன்
படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள் பாத
நடைகற்பான் வந்தடைந்தோம் யாம் 44

நளன் மனநிலை

இற்றது நெஞ்சம் எழுந்த திருங்காதல்
அற்றது மானம் அழிந்ததுநாண்-மற்றினியுன்
வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்காமத்
தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து 45


வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன்-சேம
நெடுங்குடையாய் என்றுரைத்து நீங்கியதே அன்னம்
ஒடுங்கிடையாள் தன்பால் உயர்ந்து 46


இவ்வளவிற் செல்லுங்கொல் இவ்வளவிற் காணுங்கொல்
இவ்வளவிற் காதல் இயம்புங்கொல்-இவ்வளவில்
மீளுங்கொல் என்றுரையா விம்மினான் மும்மதம்நின்
றாளுங்கொல் யானை அரசு 47


சேவற் குயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல் கேட்டு
ஆவி உருகி அழிந்திட்டான்-பூவின்
இடையன்னச் செங்கால் இளவன்னம் சொன்ன
நடையன்னம் தன்பால் நயந்து 48


அன்னம் உரைத்த குயிலுக் கலசுவான்
மென்மயில்தான் தோகை விரித்தாட-முன்னதனைக்
கண்டாற்றா துள்ளம் கலங்கினான் காமநோய்
கொண்டார்க்கிஃ தன்றோ குணம் 49