பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

புகழேந்தி நளன் கதை



தமயந்தியின் நினைவு வந்ததது. அவள் அழகிய நடை அவனைக் கவரும் என்று முடிவு செய்தது. மூங்கில் போன்ற தோள்களை உடையவள் அவள். அவள் தோள்களைத் தழுவுவதற்கு ஏற்றவன் அவன் என்று முடிவு செய்தது.

“புகழ்மிக்க அரசனே! உன் பருத்த தோள்களுக்கு ஏற்றவள் சிறுத்த நெற்றியை உடைய பேரழகி தமயந்தி என்பாள் இருக்கிறாள். அவள்தான் உனக்கு ஏற்றவள்” என்று பேசியது.

காதல் விருப்பு அவனுக்கு எழுந்தது. அன்னத்தின் சொற்கள் அவனுக்குக் களிப்பு ஊட்டின; வேட்கையைத் துண்டின. அவளை அவன் தன் இதயத்தில் இருத்தினான். கன்னி அவன் மனக் கோயிலில் இடம் பெற்றாள். மன்மதன் அவன் ஆசையைத் துண்டிவிட்டான். தன் மனத்தை அவனால் அடக்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

மயிலே வந்து நடமாடுவது போன்று அவளை அவன் அதன் சொற்களில் கண்டான். தமயந்தியின் மென்மையான சாயல் அவனைக் கவர்ந்தது. “மயில் அனையாள்; அவள் யார் மகள்?"என்று ஒரு வினாவினைக் கேட்டு வைத்தான்.

அவள் அரச மகளா? தெய்வ மகளா? என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. அரச மகளாயின் அவள் தந்தை யார்? நாடு , யாது? என்பனவற்றை அறிய ஆவல் கொண்டான். ஊர், பெயர் கூறினால் தெரிந்து கொள்ளலாம் என்ற ஆவல் கொண்டான்.

‘விதர்ப்பன் மகள்’ என்று அன்னம் பதில் உரைத்தது. பேரரசன் மகள் அவள் என்பதை அறிந்து கொண்டான். அவளை எப்படி அடைவது?

அந்த அன்னம் அவன் விருப்பத்தைத் துண்டியது. அவள் நற்குணங்களையும், செயல்களையும் விளம்பத்