பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

புகழேந்தி நளன் கதை




மங்கை சுயம்வரம்

மங்கை சுயம்வரநாள் ஏழென்று வார்முரசம்
எங்கும் அறைகென் றியம்பினான்-பைங்கமுகின்
கூந்தல்மேற் கங்கைக் கொழுந்தொடும் நன்னாடன்
வேந்தர்மேல் தூதோட விட்டு 63


மாமுத்த வெண்குடையான் மால்களிற்றான் வண்டிசைக்கும்
தாமத் தரிச்சந் திரன்சுவர்க்கி-நாமத்தால்
பாவேய்ந்த செந்தமிழாம் என்னப் பரந்ததே
கோவேந்தர் செல்வக் குழாம் 64


செந்தடையும் வண்டுறைதார்ச் செய்யாள் வளர்மார்பன்
கந்தடையும் வேழக் கடைத் தலைவாய்-வந்தடைந்த
பூவேந்தர் தங்கள்கிளை பொன்னகளில் ஈண்டிற்றே
கோவேந்தன் மாதைக் குறித்து 65


புள்ளுறையும் சோலைகளும் பூங்கமல வாவிகளும்
உள்ளும் புறமும் இனிதுறைந்தார்-தெள்ளரிக்கண்
பூமகளைப் பொன்னைப் பொருவேல் விதர்ப்பன்றன்
கோமகளைத் தம்மனத்தே கொண்டு 66

வழிபார்த்து இருத்தல்

வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம
மொழிமேல் செவிவைத்து மோகச்-சுழிமேல்தான்
நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர 67


முகம்பார்த் தருள்நோக்கி முன்னிரந்து செல்வர்
அகம்பார்க்கும் அற்றோரைப் போல - மிகுங்காதல்
கேளா விருந்திட்டான் அன்னத்தைக் கேளாரை
வாளால் விருந்திட்ட மன் 68


அன்னக் குலத்தின் அரசே! அழிகின்ற
என்னுயிரை மீள எனக்களித்தாய் - முன்னுரைத்த