பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

புகழேந்தி நளன் கதை




நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டும் அளவில் திறந்ததே - பூண்டதோர்
அற்பின்தாழ் கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்
கற்பின்தாழ் வீழ்த்த கதவு 89


உய்ஞ்சு கரையேற ஒட்டுங்கொல் ஒண்டொடியாள்
நெஞ்சு தடவும் நெடுங்கண்கள் - விஞ்சவே
நீண்டதோ அங்ஙனே இங்ஙனே நீள்மலராள்
ஆண்டதோள் மன்னன் அழகு 90


மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்
பொன்னாணும் புக்கொளிப்பப் புல்லுவனென் - றுன்னா
எடுத்தபே ரன்பை இடையே புகுந்து
தடுத்ததே நாணாம் தறி 91


காவல் கடந்தெங்கள் கன்னிமா டம்புகுந்தாய்
யாவானோ விஞ்சைக் கிறைவனோ - தேவனோ
உள்ளவா சொல்லென்றாள் ஊசற்குழைமீது
வெள்ளாவாள் நீர்சோர விட்டு 92


தீராத காமத் தழலைத்தன் செம்மையெனும்
நீரால் அவித்துக் கொடுநின்று - வாராத
பொன்னாடர் ஏவலுடன் போந்தவா சொல்லித்தன்
நன்னாடுஞ் சொன்னான் நளன் 93


என்னுரையை யாதென்றிகழா திமையவர்வாழ்
பொன்னுலகம் காக்கும் புரவலனை - மென்மாலை
சூட்டுவா யென்றான் தொடையில்தேன் தும்பிக்கே
ஊட்டுவான் எல்லாம் உரைத்து 94


இயமரம்நின் றார்ப்ப இனவளைநின் றேங்க
வயமருதோள் மன்னா வகுத்த - சுயம்வரந்தான்
நின்பொருட்டால் என்று நினைகென்றாள் நீள்குடையான்
தன்பொருட்டால் நைவாள் தளர்ந்து 95